Top 10 Thriller Movies List in Tamil


    TOP 10 சிறந்த Horror Thriller படங்களின் பட்டியலை வரிசையாக இக்கட்டுரையில் காண்போம்.


  1) முதலே ஒரு படம் இல்லை அது ஒரு தொடர் ஆகும். Turkey மொழியில் வெளியான Siccin பட தொகுப்பு இதில் சுமார் ஆறு படங்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக பேய் பட இயக்குனர்கள் அனைவரும் பார்வையாளர்கள் திரைக்கதையை பார்த்து மிகவும் அஞ்சி நடுங்க வேண்டும் பயப்பட வேண்டும் என்றுதான் நினைத்து படத்தை எடுக்கின்றது. ஆனால் இந்த Siccin Serice இல் ஒரு அருமையான கதை இருக்கும் அதையும் தான்டி நம் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்திருப்பார் இயக்குனர். அந்த திருப்பத்திற்காகவே இந்த படத்தை பார்க்கலாம். இந்த படத்தில் பேய் படம் என்பதால் சிறிது ரத்தக் காட்சிகள் அதிகமாகவே இருக்கும்.

   2) 2007ம் ஆண்டு ஒரு American horror thriller படமாக வெளியான the Messenger சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்படத்தின் கதாநாயகி அவர்கள் குடும்பமும் ஒரு இடத்தை விட்டிவிட்டு புதிதாக ஒரு வீட்டில் சென்று குடியேறுகின்றனர். அந்த வீட்டில் குடியேறிய பிறகு அவர்கள் சந்தித்த அமானுஷ்யம் மற்றும் மர்மமான விடயங்கள் என்னென்ன என்பதுதான் இப்படத்தின் மொத்த கதை. இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் கதாநாயகி 3-4 வயதில் ஒரு தம்பி இருப்பான் அவனுக்கு மட்டும்தான் பேய் கண்ணுக்குத் தெரியும். ஆனாலும் அந்த சிறுவனால் பேச முடியாது.இந்தப் ஒரு விடயத்தை முழுமையாக பயன்படுத்தி படத்தினை அருமையாக எடுத்திருப்பார் இப்படத்தின் இயக்குனர்.

   3) 2018ம் ஆண்டு South Korean மொழியில் horror thriller படமாக வெளியான CONJIAM the honted Asylum . இந்த படத்தின் கதை என்ன வென்றால் கதாநாயகன் ஒரு YouTube சேனல் நடத்தும் ஒரு You Tuber. அவருடைய சேனலின் சந்தாதாரர்கள் மற்றும் பார்வையாளர்களை அதிக படுத்த திட்டம் தீட்டுகிறார். Psychotic hospital இல் அமானுஷ்யம் உள்ளது என்று நிருபித்தில் தான் செய்யமுடியும் என்று இவரும் இவரது குழுவும் அந்த மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதற்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் முழு கதை.

    4) 2012 ஆன் வெளியான American supernatural horror thriller படமாக வெளியான Sinister. இந்த படத்தின் கதை என்னவென்றால் Crime Novals எழுதக் கூடிய ஒரு எழுத்தாளர் படத்தின் கதாநாயகன் ஒரு கொலை நடந்த வீடு அந்த வீட்டிற்கு சென்று ஆராய்ச்சி செய்யலாம் என்று அந்தக் கொலையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலை சேகரித்து அவற்றை ஒரு நாவலாக வெளியிடலாம் என்று அந்த வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று குடியேறுகிறார்.அதற்குப் பிறகு இவரும் இவரது குடும்பத்தார் ஒரு சந்தித்த அமானுஷ்ய நிகழ்வுகள் என்ன என்பதுதான் இப்படத்தின் கதை.

   5) 2008 ஆம் ஆண்டு வெளியான Hollywood supernatural படமாக வெளியான Mirrors . இப்படத்தின் கதை என்னவென்றால் New York Police department இல் detective ஆக பணிபுரிந்து தற்போது பணியிடை நீக்கத்தில் இருக்கும் கதாநாயகன், அன்றாட செலவுக்காகவும் மற்றும் உணவிற்காகவும் பணத்தினை சம்பாதிக்க 5 வருடத்திற்கு முன் எரிந்து இருந்த ஒரு கட்டிடம் அதற்கு காப்பாளராக வேலையில் சேருகிறார். அங்கு இவர் எதிர்கொண்ட சில அமானுஷ்யமான நிகழ்வுகள் தான் இந்தப் படத்தின் மொத்த கதை.

     6) 2017 இல் Indonesia horror படமாக வெளியான சாத்தானின் அடிமைகள்.இந்த படத்தின் கதை என்னவென்றால் ஒரு மர்மமான நோய் அந்த நோயினால் இருக்கும் ஒரு தாய் இறந்த பிறகும் தன் பிள்ளைகளை தனியாக விட்டு செல்ல கூடாது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மீண்டும் அப் வீட்டிற்கு வருகிறார். பிறகு அங்கு நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் தான் மொத்த கதை.

   7) 2016 இல் வெளியான ஒரு English horror வெளியான The Autospy of Jane Doe. இப்படத்தின் கதை என்ன வென்றால் காவல்துறை ஒரு பெண்ணின் சடலத்தை கண்டு பிடிக்கிறது. அந்தப் பெண் இதனால் ஏற்பட்ட காரணத்தைக் கண்டுபிடித்து தருமரு காவல்துறையால் கதாநாயகனுக்கு சம்பளம் தரப்படுகிறது. கதாநாயகனும் அவனது தந்தையும் சேர்த்து வந்த சடலத்திற்கு உடற்கூறு ஆய்வு செய்கிறார்கள் இந்த சமயத்தில் அவர்கள் சந்தித்த அமானுஷ்யங்கள் குழுவுக்கு மொத்தப் படத்தின் கதை.   

 8) 2002 இல் Hollywood supernatural படமாக வெளியான The RING. இப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு ஒளிப்பதிவு அந்த டேப்பை நீங்கள் பார்த்துவிட்டால் ஒரு வாரத்தில் இறந்து விடுவீர்கள். அந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் எதற்காக இறந்து போகிறார்கள் என்று என்று களத்தில் இறங்கும் கதாநாயகியை கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.

   9)  2011 இல் வெளியான Canadian found footage horror படமாக வெளிவந்த grave encounter. இந்த படத்தின் கதை என்னவென்றால் இந்தப் படத் தொகுப்பு கிட்டத்தட்ட ஐந்து எபிசோடுகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது தற்பொழுது ஆறாவது எபிசோடு வெளியாகவிருக்கிறது. அப்பொழுது கதாநாயகனும் கதாநாயகியும் abundant psychotic hospitals உள்ளேஉள்ளே சென்று அங்கு அமானுஷ்யங்கள் இருக்கிறதா இல்லையா என்ற ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதற்குப் பிறகு அவர்களுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் மொத்தப் படத்தின் கதை.

  10) 2018 இல் Turkish horror படமாக வெளியான The Curse . இப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது தோழி மாட்டிக் கொண்டு விட்டார் எனத் தெரிந்தும் தான் உள்ளே சென்று காப்பாற்றினால் தான் உயிரும் போய்விடும் அப்படி என்று நினைத்து தன்னை நிர்கதியாக நிற்க விட்டு தப்பித்து ஓடும் மூன்று பெண் தோழிகள் இதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்ய நிகழ்வுகள் தான் இப்படத்தின் கதை.இந்தப் படத்தின் கதையானது மிகவும் சுலபமான சிறிய கதை இருந்தாலும் திரைக்கதையில் வாயிலாக மிக அருமையான இப்படத்தினை கிடைத்திருக்கின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்