The Maid - story in Tamil

     The Maid என்னும் படத்தின் ஒரு திகில் கதையைத்தான் இந்த கட்டுரையில் காண போகின்றோம். Lee Thongkham இயக்கத்தில் ஒரு தாய்லாந்து நாட்டை சேர்ந்த திகில் படமாக Netflix வெளிவந்திருக்கும் இதை The Maid படத்தின் கதையை தான் பார்க்க போகிறோம்.


One Line Story (ஒரு வரி கதை):

   ஒரு மிகப்பெரிய பணக்கார வீடு , அந்த வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஒரு சிறிய பெண் குழந்தை குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக மட்டும் அல்லாமல் வீட்டையும் பார்த்துக் கொள்வதற்கு அங்கு வேலைக்கு செல்லும் கதாநாயகி அங்கே அவர் சந்திக்கும் அமானுஷ்யமான நிகழ்வுகள்  மருமங்கள் தான் இப்படத்தின் மொத்த கதை.


Story (முழு கதை):

      மிகவும் பணக்கார ஒரு குடும்பத்தில் வேலைக்காரியாக மற்றும் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக ஒரு பெண் வேலைக்கு சேருகிறார்.அப்பொழுது அந்த குழந்தையிடம் இருக்கும் ஒரு குரங்கு பொம்மை அடிக்கடி உயிருடன் வந்து தன்னை தாக்குவதாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் இந்தப் பெண் உரையாடுகிறார். மற்றும் இந்த பெண் தான் இந்த வீட்டில் இருந்துவேலைக்கு இனி வரப்போவது இல்லை எனவும் கூறுகிறார் அதற்கு அந்த உரிமையாளர் சரி என்று மிகவும் சாந்தமாக விடையளிக்கிறார்.

   அன்றிரவு இந்த குழந்தையை உறங்க வைக்க தனது தாய் அங்கு செல்லும் பொழுது "அந்த வேலைக்காரி சொன்னது எல்லாம் உண்மையா" என்று தன் தாயிடம் கேள்வி எழுப்புகிறார்.அதற்கு அந்த தாய் இல்லை இதை எல்லாம் கட்டுக்கதை என சொல்லவும் அந்தப் குழந்தை நானும் அதை பார்த்து இருக்கிறேன் என்று அந்த குழந்தையும் கூறுகிறார்.  


   அக்குழந்தையை அந்தத் தாய் சமாதானப்படுத்தி விட்டு திரும்பும் பொழுது அந்தக் குரங்கு பொம்மை உயிருடன் நடமாடுவது போன்று இவருக்கும் தோன்றுகிறது.இந்த வீட்டின் உரிமையாளர் பெண்ணிற்கும் இந்த அமானுஷ்ய சம்பவங்களுக்கு மீது தொடர்பு இருப்பது போன்று தோன்றுகிறது.இந்த அனைத்தையும் அந்த வேலைக்காரப் பெண் ஒரு டாக்டரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.மற்றும் அந்த வீட்டில் ஒரு கொடூரமான பெண்ணின் ஆவி இருப்பதாகவும் அந்த வேலைக்கார பெண் கூறினார்.

   நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைக்கு திடீரென்று விழிப்பு வருகிறது அப்பொழுது கதவின் அருகே ஒரு கொடூரமான ஆவியின் உருவம் தோன்றி அந்த குழந்தை அழுகிறது. பிறகு மறுநாள் ஒரு மருத்துவரை அழைத்து அந்த குழந்தைக்கு என்ன நடந்தது என்று கேட்கும் பொழுது டாக்டர் கூறுகையில் இந்த குழந்தைக்கு கற்பனையான ஒரு பெண்ணின் உருவம் தோன்றி உள்ளது. அதனால் அந்தக் குழந்தையின் உணர்வுகளில் அதிக கவனம் செலுத்தி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.இந்த குழந்தையின் பெற்றோர்கள் எத்தனை கண்டுகொள்ளக் கூடிய மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டார்.இப்படி அதிக திருப்பங்களும் மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த படம் இவ்வாறே நகர்ந்து கொண்டிருக்க கடைசியில் என்ன நடக்கப் போகின்றது என்பதுதான் படத்தின் சுவாரசியம் மற்றும் அருமையான கதை களம்.


Positives (படத்தின் சிறப்புகள்):

  1. இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை கச்சிதமாக பொருந்தி நடித்து பிறப்பித்துள்ளனர். குறிப்பாக படத்தின் கதாநாயகியான poly sarnarin என்பவரது நடிப்பும் மற்றும் மற்றொரு கதாபாத்திரமாக வரும் kannaporn puangtong நடிப்பு இங்கு குறிப்பிட்டு கூறத்தக்கது.அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை இங்கு குறிப்பிட்டால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும் என்பதனால் அதனை நீங்கள் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

  2. இரண்டாவது இந்தப் படத்தில் காணப்படும் திகில் காட்சிகள்‌. பொதுவாக திகில் காட்சிகள் எனப்படுவது spooky horror இல்லை ரத்த கலந்த திகில் படமாக தான் இருக்கும். இந்த இரண்டு வகையான பண்புகளும் ஏதாவது ஒரே படத்தில் அமைவது என்பது மிகவும் அரிதாகவே இருக்கும் அது இந்த படத்தில் அமைந்துள்ளது. திகில் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்ததாக இருக்கலாம்.

  3. Brant என்னும் நபர் தான் இப்படத்தின் cinematographer. படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிந்த  Bruno இருந்தாலும் சரி அவர்களின் திறமையை சரியான கோணத்தில் கொடுத்து வைத்திருக்கின்றனர்.cinematographer என்பது ஒரு சில படங்களில் மட்டும் தான் நம்மை வியக்க வைக்கும் அதுபோன்ற ஒரு படம் தான் இது. காலையில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு ஆக  இருந்தாலும் சரியே இல்லை அடுத்த படைப்பாக இருந்தாலும் சரி மிக்க அருமையான கோணத்தில் ‌எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் எந்த இடத்திலெல்லாம் mystery factor வருகின்றதோ அங்கெல்லாம் பியோன் அவை பயன்படுத்தி ஒரு விஞ்ஞானப் பின்னணி இசையை ஏற்படுத்தியுள்ளார். உதாரணமாக கதாநாயகி வீட்டினுள் நுழையும் பொழுது ஒரு பின்னணி இசை வரும் அதையே எங்கெங்கெல்லாம் மர்மம் ஏற்படவேண்டும் என்று நினைக்கிறார்களோ இங்கெல்லாம் இந்த சத்தத்தை வைத்தே திகிலூட்டுகின்றனர்.

Negatives (‌ எதிர்மைறை ):

  1. இந்தக் கதையானது திகில் பட வரிசையில் வந்த புதிய கதை என்று கூற முடியாது. இதற்கு முன் வெளிவந்திருக்கும் திகில் படங்களில் ஒரே கதையைத்தான் எதிலும் பயன்படுத்துகின்றனர்.

  2. இவர்கள் செய்த சில கதாபாத்திரங்கள் வடிவமைப்பில் ஒரு சிலருக்கு உருவாக்கப்பட்ட விதம். குரங்கு பொம்மை ஒன்றை காட்டுவார்கள். இதனை வைத்து சில இடங்களில் திகில் பயன்படுத்த முயற்சிக்கின்றனர் ஆனால் எந்தக் காரணத்திற்காக அந்த கதாபாத்திரம் அங்கு வைக்கப்பட்டது என்பதற்கு விபரம் இல்லை.

மொத்தமாக இந்த படம் எப்படி இருக்கிறது என்றால் திகில் பட விரும்பிகளுக்கு இந்த படமானது முன்கூட்டியே சொன்னதுபோல இரு படங்களின் கலவையாக உள்ளது. இந்தப் படத்தின் கதையை சமூக வலைதளமான யூடியூப் பக்கத்தில் மற்றும் ஃபேஸ்புக் அல்லது திரையரங்கம் ஆகிய  மூன்று இடங்களிலும் நீங்கள் சென்று பார்க்கலாம்இது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்