Story of Irfan's views YouTube channel

 யார் இந்த Irfan?


     Irfan's view என்னும் யூடியூப் சேனல் இன் கதையை இக்கட்டுரையில் காண்போம்.இதனை Irfan   இன்னும் ஒரு நபர் நடத்தி வருகிறார். சூளைமேட்டில் இருக்கக்கூடிய கான் வீதியில் தான் இவரின் வீடு உள்ளது. இவரின் தந்தை ஆட்டோவிற்கு கூரை மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். இந்த வேலையானது ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் மற்ற சில நாட்களில் வேலை இல்லாமல் தான் இருப்பார்கள். அவர்களின் வீட்டின் வாடகை 1200 ரூபாய் ஆகும். இர்பான் சிறுவயதில் இருக்கும் பொழுது இந்த 1200 ரூபாய் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளனர். 
அவர் தாயிடம் கேட்கும்போது அவர் என்ன சொன்னார் என்றால் தனது மகன் வேலைக்கு செல்லும் வரையில் வீட்டின் உரிமையாளர் ஐந்தாம் தேதி பத்தாம் தேதி போட்ட நாட்களில் வந்து வாடகை கேட்கும்பொழுது இருப்பான் ஓடிச்சென்று தனது ரூமில் கதவை சாத்திக் கொள்வார். ஏனென்றால் தனது தாய் மற்றவர்களிடம் கெஞ்சுவதை மற்றும் பேசுவதை கேட்க முடியாமல் ஒழிந்து கொள்வார்.

இவருக்கு பிடித்த உணவு:

 
   இர்பான் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் தான் வாடகை என்பது இயல்பாக கொடுக்க முடிகின்றது. அதுமட்டுமல்லாமல் இவர் சிறிய வயதில் தன் தாயிடம் இவருக்கு மீன் வேண்டும் மீன் வேண்டும் என்று அடம் பிடிப்பார் ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு மீன் வாங்க பணம் இருக்காது. மூன்று, நான்கு மாதத்திற்கு ஒரு முறை 10 ரூபாய் கொடுத்து மீன் வாங்கி கொண்டு வந்து இர்பானுக்கு கொடுப்பார்களாம். அதுவும் மூன்று நான்கு மீன்கள் மட்டும் தான் 10 ரூபாய்க்கு கிடைக்கும் அதில் மீனின் தலையை தனது தாயுடன் மற்றும் மற்ற பாகங்களை தனது சகோதரியும் இபவரும் உண்பார்களாம்.


பள்ளி பருவம்:


    இவர் பள்ளிக்கு செல்லும் வழியில் அந்த ஆட்டோ கடை இருக்கும் அதில் இருக்கும் அனைவரும் இவரை குண்டன் குண்டன் என்று கிண்டல் செய்வார்களாம். இவர்களின் பள்ளி நண்பர்களும் இவரை "குண்டா தடியா சோத்துக்கு ரெடியா" என்று கிண்டல் செய்வார்கள்.
அதனால் இவருக்கு பள்ளி செல்லவே பிடிக்காதாம். இந்த உடல் எடையை குறைக்கலாம் என்று ஏதாவது விளையாட்டில் கலந்து கொள்ளலாம் என்றால் அதற்கும் அவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இதனை தனது தாயுடன் கூறி நன்கு அறிந்திருக்கின்றனர் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்று எல்லாம் எழுதி இருக்கின்றார். அதற்கு அவரது தாய் ஒரு வார்த்தை கூறினார் அது என்னவென்றால் எனது மகன் நன்றாக படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் ஒழுக்கத்தில் குறைந்தவர்களாக இருக்க கூடாது என்று எண்ணி அனைத்து நாளும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
   சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்லவேண்டும் விடுமுறை எடுக்க கூடாது ஆசிரியர் சொல்லும் செயலை செய்ய வேண்டும் பேச்சை கேட்க வேண்டும்.தனது அம்மாவின் பேச்சை கேட்டு ஏற்பான் மூன்று விஷயங்களை யோசிக்கிறார்.

  1. ஒன்று தன்னை யாரும் குண்டா தடியா என்று அழைக்கக் கூடாது. 
  2. இரண்டாவது தனக்கு விருப்பமான தனக்கு மிகவும் பிடித்த மீனை அதிகமாக உண்ண வேண்டும். 
  3. மூன்றாவதாக வீட்டு வாடகை கேட்டு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டிற்கு முன் நிற்க கூடாது.


வெளிநாட்டு வாய்ப்பு:


  ஒரு நான்கைந்து மாணவர்களிடம் வெளிநாடு செல்ல நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது அதில் இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஏனென்றால் இவர் நன்றாக படிக்கும் மாணவரும் கிடையாது இவர் மிகவும் ஒழுக்கமாக ஆசிரியர் சொல்லும் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருப்பதனால் மட்டுமே குறை தேர்ந்தெடுத்தனர்.இவரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கின்றனர் அமெரிக்காவிற்கு சென்று படிக்கும் பொழுதுதான் இருவருக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்பது குறைகிறது. குண்டன் குண்டன் என்ற தாழ்வு மனப்பான்மையில் உள்ள ஒரு பையன் மிகவும் பணம் இல்லாமல் தவித்த ஒரு பையனுக்கு உனக்கு ஏதேனும் ஒன்று வேண்டுமென்றால் தேவை என்றால் அதை நீ தான் செய்யவேண்டும் என்று உணர்த்தியது.

இந்தியா திரும்புகை:


    அனைத்தையும் கற்றுக்கொண்டு மீண்டும் இந்தியா திரும்புகிறார் இங்கே கல்லூரி வாழ்க்கை மற்றும் டிகிரியை முடிக்கின்றார். 2016 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு யோசனை தோன்ற நின்றது தான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே ஒரு யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது.

YOU TUBE தொடக்கம்:


    அப்பொழுது அவரது கையில் மொபைல் போன் என்பது இல்லை. அவர் வேலைக்கு செல்ல ஆரம்பித்தவுடன் EMI ஒரு மொபைலை வாங்குகின்றார். மற்ற ஏதேனும் ஒரு செயலை செய்து தோல்வி அடைந்து விட்டால் வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் யூடியூபில் முயற்சி செய்து தோல்வி அடைந்துவிட்டால் அது அனைவருக்கும் தெரிந்துவிடும். தனது நண்பர்களுடன் இணைந்து two stupid என்று இன்றைய ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பதிவேற்ற உள்ளனர்.பிறகு இவரே ஒரு யூடியூப் சேனலை தொடங்கி பட விமர்சனங்களை செய்ய ஆரம்பிக்கிறார் ஆனாலும் அது வெற்றி அடையவில்லை.
   

     Vlog செய்ய முயற்சிக்கும் பொழுது தனது மொபைல் வெறும் 16 ஜிபி என்பதனால் இரண்டு மூன்று நாட்கள் ஒரே விடியோவை எடுத்து அதனை தனது மொபைலில் எடிட் செய்து வெளியிடுவார். இவர் வேலை செய்யும் அலுவலகத்தின் பக்கத்தில் இருப்பவரை இவரைப் பார்த்து கேவலமாக சிரிப்பார்கள் ஆம் ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு காணொளியை வெளியிட்டதற்காக. மீண்டும் அவர் தாழ்வு மனப்பான்மைக்கு செல்ல தனது தாயின் வாய்க்கு எங்கள் நினைவுக்கு வர அதை மீண்டும் தொடர்ந்து செய்து நேரம் தவறாமல் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.

     தனக்கு சிறுவயது ஆசை என்னவென்றால் நன்றாக சாப்பிட வேண்டும். தனக்கு மிகவும் பிடித்த மீன் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். தனது ஆள் மனது ஆசையை ஒரு காணொளியாக செய்ய ஆரம்பிக்கிறார். ஒரு உணவகத்தில் சென்று நன்றாக உண்டு அதனை விமர்சனமாக வெளியிடலாம் மற்றும் அதிக பார்வையாளர்களை கொண்ட உடன் நம் இலவசமாக உண்ணலாம் என்று யோசிக்கிறார்.

FOOD REVIEWS:


     Food review என்னும் அஸ்திரத்தை கையில் எடுத்து தினமும் ஒரு காணொளியை தொடர்ந்து வெளியிட வெளியிட இவருக்கான பார்வையாளர்களும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இன்று Irfan 2010 கைக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் 30 லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் வருகின்றனர். 

   அன்று உண்ணும் உணவுக்கு கஷ்டப்பட்ட இன்றி தனது ஸ்டூடியோக்களில் 8 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய கருவிகளை வைத்துள்ளார்.ஒரே ஒரு மீன் துண்டை உண்டுவிட்டு இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சிறுவயதில் கனவு கண்ட அந்த சிறுவன் இன்று ஒவ்வொரு உணவகத்திலும் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று கூறுகின்றனர் கிடைக்கின்றது.

    வீட்டிற்கு வெளியே தனது அம்மா மன்னித்துவிடுங்கள் மன்னித்துவிடுங்கள் வாடகை தானே நான் கொடுத்து விடுகிறேன் என்று கெஞ்சிக் கொண்டிருந்த தனது அம்மா அதற்காக இன்று மேடவாக்கத்தில் ஒரு வீட்டை கட்டி கொண்டிருக்கின்றார்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்