Tikilona Movie Review In Tamil

     TAMIL MOVIES DA வழங்கும் "டிக்கிலோனா" (Dikilona)  படத்திற்கு தரமான மற்றும் நேர்மையான திரைப்பட விமர்சனம் (Review).இப்படமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 இல் சந்தானம் (Santhanam) நடிப்பில் , கார்த்திக் யோகி ( Karthik Yogi )இய்ககத்தில் வெளியான டிக்கிலோனா என்ற படத்தின் திரை விமர்சனத்தை (Movie Review) தான் கான்போம்.


கதை(Story):

     கல்யாணம் ஆன கதாநாயகனுக்கு (Santhanam) 7 வருடம் கழித்து இந்த கல்யாண வாழ்க்கை என்பதில் விருப்பம் இல்லை இந்த திருமணமே நடந்திருக்க வேண்டாம் என சந்தானம் நினைக்கையில் இவர் 7 வருடங்களுக்கு முன் பயணம் செய்து (Time Travel)  இந்த திருமணத்தை நிறுத்த வாய்ப்பு கிடைக்கின்றது. இந்த கல்யாணத்தை நிறுத்துவோம் வாழ்கையில் மகிழ்ச்சியாக வாழ்வோம் நமக்கு பிடித்த உலகில் வாழலாம் என நினைக்கும் கதாநாயகன்‌ என்னொன்ன செய்தார் இதுதான் இப்படத்தின் கதை.


நேர்மறை விமர்சனம் (Positives):

  1.  இந்த படத்தின் கதாநாயகன் எடுத்துகாட்டாக இரண்டு கதாநாயகர்கள் ஒரு குறிபிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட காரணங்கள் காக ஆள் மாறாட்டம்என்ற கதைகளங்கள் உலக சினிமாவில்  100 என 1000 முறை கண்டிருப்போம் ஏன் நம் தமிழ் சினிமாவில் ஆயிரத்து எட்டு படம் இக்கதை கலத்தில் உண்டு. ஆனால் அதே கதைகலம்தான் இந்த படத்திலும் என்ன வித்தியாசம் என்றால் ஒரே கதாநாயகன் காலம் பயணம் செய்து கடந்த கால தன்னையே மாறாட்டம் செய்து சுவாரஸ்யம் படுத்தி இருகின்றனர்.இதற்கு முன் இருந்த படத்தின் கதையை காலப்பயணம்(Time Travel) மூலம் புதுமையாக கூறி இருக்கின்றனர்.மற்றொரு பக்கம் இப்படத்தின் நகைச்சுவை பகுதி படத்தில் ஒரு சில இடங்கள் சொதப்பி இருந்தாலும் சில இடங்களில் நகைச்சுவை (Comedy) நன்றாக உள்ளது முக்கியமாக கடைசி 30 நிமிடம் மொட்டை ராஜேந்திரன் போன்றோர் சொல்லு சபா போன்று அதிக நகைச்சுவை காட்சிகள் உள்ளது


  1. இப்படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் குறிப்பாக சந்தானம்‌ இரண்டு கதா நாயகிகளான‌ அனகா ,சிரின் ஆகியோரின் நடிப்பும் யோகி பாபின் நடிப்பும் ஆனந்த ராஜ் , முனிஸ்காந்த் இருவரின் இனைக்காமெடி அருமை. சந்தானம் தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்தனும் என்று முயற்சி செய்து பல படங்களில் காய் நகர்த்தி வருகிறார்.ஏன்என்றால் படத்தில் உணர்ச்சி பூர்வமான ஒரு பகுதியை சாதகமாக பயன்படுத்தினார் சந்தானம்.இட்டஸ் பிரசாந்த் காட்சிகள் Boy Bestie என்னும் கதாபாத்திரத்தில் 3 காட்சிகள் வந்தாலும் அவரின் நடிப்பு பாராட்ட தக்கது.


எதிர்மறை விமர்சனம் (Negative):


  1. இந்த படத்தின் திரைக்கதை முழுவதும் இல்லாமல் முதல் 30 நிமிடம் நன்றாகவும் கடைசி 30 நிமிடம் நகைச்சுவையாகவும் நடுவில் உள்ள 45 நிமிடம் சுவாரஸ்யம் இல்லாமல் மெதுவாக செல்கின்றது.

  2. யுவன் சங்கர் ராஜா இசை ஒருபாடல் "வச்சாலும் வச்சாலும்" பாடல் வரிகள் அருமை ஆனால் அதன் பெருமை இளையராஜா வை சேரும் ஆனாலும் அவரின் பங்கு இப்படத்தில் சிறிது குறைவு.


இறுதி:

            மொத்தமாக இந்த படம் ஒரு ஆள்மாராட்ட கதை அதனுடன் ஒரு அறிவியல் கற்பனை (Science Fiction) கூட குடுத்தாலும் ஒரு சராசரியான நகைச்சுவை திரைப்படம் தான் இதுபொழுது போகாதீர்கள் ஒரு முறை இப்படத்தை பார்க்கலாம்.இந்த படத்தில் எவ்வித ஆபாச மற்றும் தரம் கெட்ட 18 வயது மேற்ப்பட்ட காட்சி எதுவும் இல்லை குடும்பத்துடன் இதை காணலாம். Zee 5 இல் இப்படமானது வெளியாகி உள்ளது.


TAMIL MOVIES DA RATING: 6.5/10


கருத்துரையிடுக

0 கருத்துகள்