Thuklak Tharbar movie Review

     TAMIL MOVIES DA வழங்கும் துக்ளக் தர்பார். (Thuklak Tharbar) என்னும் தமிழ் திரைப்படத்தின் நேர்மையான மற்றும் சரியான திரைப்படம் விமர்சனம். துக்ளக் தர்பார் இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி (Vijay sethupathi), ராசி கண்ணா (Rashi kanna) மற்றும் பார்த்திபன் (Parthiban) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியின் தங்கையாக மஞ்சிமா மோகன் (Manjima Mohan) மற்றும் இவரின் நண்பராக நகைச்சுவை நடிகர் கருணாகரன் (Karunakaran) என்பவரும் குணச்சித்திர நடிகராக பகவதி பெருமாளும் (Pagavathi Perumal) (மங்களம்)  நடித்துள்ளனர். 


       துக்ளக் தர்பார் இப்படமானது அரசியல் நாடக மற்றும் அரசியல் விமர்சன படமாகும். இப்படத்தினை டெல்லி பிரசாத் தீனதயாளன்(Delhi presanth Deenathaiyalan)  எனும் இயக்குனர் இயக்கியுள்ளார் மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் (Govindh) உள்ளார். குறிப்பு செய்தியாக பிக் பாஸ் சீசன் 4 (BigbBoss) இல் ஒரு போட்டியாளராக சென்ற சம்யுக்தா (Samuktha) என்பவர் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.


 கதை:  

          பார்த்திபன் அரசியல் கட்சி மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விஜய் சேதுபதி மேடையில் பிறந்தார். விஜய் சேதுபதி பிறந்த சில காலம் பின் அவர் தாயார் இறந்து விட்டதால் அவர் மற்றும் அவர் தங்கை மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். பார்த்திபனின் அரசியல் வளர்ச்சியை கண்டு வியந்த விஜய் சேதுபதியை தானும் அதே போன்று வளர வேண்டும் என்று சிறுவயது முதலே கனவு கொள்கிறார். பார்த்திபனுக்காக சுவரொட்டி (Poster) மற்றும் விளம்பரங்களை தன் தாயின் மூக்குத்தியை விற்று செலவு செய்கிறார் இதனால் வருத்தமடைந்த இவரது தங்கை மஞ்சிமா மோகன் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். 


    பிறகு இருபது வருடங்களுக்கு பிறகு கதை தொடர்கிறது. சிங்கம் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி பார்த்திபனுக்கு நெருக்கமாக பழக ஆசைப்படுகிறார். ஒருமுறை பார்த்திபன்(Parthipan) பிரித்து செல்ல நேர்ந்த அதனால் அங்கு அவரது தொண்டர்கள் முழக்கங்களை ஏற்படுத்தினார் அப்பொழுது விஜய்சேதுபதியை தன்னிடமிருந்த விஷ மருந்து (poison) பாட்டிலை எடுத்து விஷத்தைப் பருகினார்.      இதனைப் பார்த்த பார்த்திபனுக்கு விஜய்சேதுபதியின் மேல் ஒரு நம்பிக்கையும் பற்றும் ஏற்படுகிறது. பிறகு ஒரு சேட்டின் மகளாக இருக்கும் ராசி கண்ணா மீது காதல் ஏற்பட்டு கதை மெதுவாக நகர்கிறது. பிறகு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று அவர் வசிக்கும் பகுதிக்கு கவுன்சிலராக மக்கள் உதவியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கிடையில் மங்கலம் எனப்படும் ஒருவர் 20 ஆண்டுகளாக பார்த்திபனுக்கு மிக நெருக்கமாக இருந்ததனால் விஜய் சேதுபதிக்கும் இருவருக்கும் இடையே நடந்த மோதலில் விஜய்சேதுபதியின் தலையில் அடிபட்டது. அன்னியன் படத்தில் உள்ளது படி விஜய் சேதுபதியும் இரு மனநிலை (multiple Personality desorder) கொண்ட நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மனநிலையில் நல்லவராகவும் மற்றொரு மனநிலையில் மிகவும் கெட்டவராகவும் ஆங்காங்கே சில நேரங்களில் அவர் நல்லவராக இருந்தும் பேச்சுக்களை கெட்டவராக மாறியவுடன் திருத்தி சமாளிக்கிறார்.


     தான் வசிக்கும் பகுதியை ஒரு கார்ப்பரேட் (Corparate) நிறுவனத்திற்கு விற்று கையொப்பமிட்டு(sign)  ஐம்பது கோடி ரூபாய் பணத்தையும் (50 crore) பார்த்திபனும் விஜய் சேதுபதியும் பெற்றுக்கொள்கின்றனர். இதனை தன் நல்ல குணாதிசயம் கொண்ட கேரக்டர் (Charector) ஆல் பணத்தை வேறு இடத்திற்கு மாற்ற மற்றும் அதற்கான ஆவணங்களையும் தொலைக்காட்சிக்கு செய்தியில் வெளியிடுகிறார். இதனையறிந்த பார்த்திபன் அப்பணத்தை கேட்டு விஜய்சேதுபதியுடன் மோதுகிறார். இக்காரணத்தினால் விஜய்சேதுபதி தனது சொந்த தங்கையை கடத்தி 10 கோடி அப்பணத்தை மீண்டும் விஜய் பார்திபனுடன் ஒப்படைத்து வருமான வரித்துறை சோதனையில் சிக்கி மீண்டும் மனம் திருத்தி மீதமுள்ள 40 கோடி பணத்தை மக்களுக்கு நன்மை செய்கின்றார். விமர்சனங்கள்:

         இப்படத்தின் திரைக்கதையில் மிகவும் சுமாராகத்தான் இருக்கிறது. கதை ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடங்கினாலும் படம் செல்ல செல்ல நமக்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இப்படி படத்தின் மையப் பகுதியில் சில காட்சிகள் புரியாத வண்ணம் உள்ளது அதேபோன்று இப்படத்தினை புரியாமல் அரைகுறையாகவே முடித்துவிட்டனர். இறுதியில் வரும் கிளைமாக்சில் (Climax) அமைதிப்படை(Amaithippadai) என்னும் படத்தில் அம்மாவசை என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் (Sathyaraj) முதல்வர் ஆகிவிட்டார் என்னும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது.   பிறகு அதில் ஒரு தற்கால நடப்பு அரசியலில் உள்ள விமர்சனங்களையும் படத்தில் புகுத்தியுள்ளார். 


அரசியல் விமர்சனங்கள்:     


           இப்படத்தில் சில இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன சுவரொட்டிகளில் பார்த்திபனுக்கு கீழாக ராசிமான் என்னும் பெயர் காணப்படுகிறது. இது நேரடியாக சீமானை விமர்சிப்பது போல் இருப்பதாக சீமானின் நாம் தமிழர் கட்சி தம்பிகள் வருந்துகின்றனர். இதற்கு முன்னர் 300 என்னும் இலங்கை தமிழராகிய முத்தையா முரளிதரன் என்னும் ஒரு criket பந்து வீச்சு வீரனின் சுயசரிதை படத்தில் நடிப்பதாக இருந்தது சீமான் மற்றும் இது போன்ற சில தமிழ் தேசியவாதிகள் விஜய்சேதுபதி அப்படத்தில் நடிக்க கூடாது என்று வற்புறுத்தி அப்படத்தை கைவிட செய்தனர். இச்செயலால் கோபமான விஜய் சேதுபதி சீமானை அவமதிக்கும் நோக்கோடு துக்ளக் தர்பார் என்னும் இப்படத்தில் சீமான் என்னும் பெயரில் வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. சகுனி மற்றும் NGK ஆகிய படங்களைப் போலவே மிகவும் சுமாரான படமாகவே துக்ளக் தர்பார் இருக்கின்றது. இப்படத்திற்கு கதாநாயகியே தேவையில்லை மற்றும் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்த மஞ்சுமா மகன் ஒரு இடத்தில் கூட பேசவில்லை என்பதால் அந்த கதாபாத்திரம் இருந்ததற்கான தேவையே இல்லை என்ற எண்ணத்தை தோன்றும்.


                     *****நன்றி*****

கருத்துரையிடுக

0 கருத்துகள்