Thalaivi Tamil Movie Review | Tamil Movies Da

   TAMIL MOVIES DA இல் வரும் Talaivi தலைவி தமிழ் படத்தின் சரியான மற்றும் நேர்மையான திரை விமர்சனம் (Movie Review). தலைவி இத்திரைப்படம் ஆனது தமிழில் வெளியான முன்னால் தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாறு தழுவி கற்பனை கலந்து எடுக்கப்பட்ட படமாகும். எ எல் விஜெய் (AL Vijay) இயக்கத்தில் மற்றும் அரவிந்த் சாமி , கங்கனா நடிப்பில் செப்டம்பர் 10 தேதி திரையரங்கு களில் வெளியான திரைப்படம் தலைவி (Talaivi).


    16 வயதில் உலகமே தெரியாத சுட்டி குழந்தையாக இருந்த ஜெயலலிதா காலம் நகர நகர தமிழ் திரையுலக பெண் சூப்பர் ஸ்டார் ஆனது மற்றும் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனது எப்படி என்று கூறும் படம்தான் தலைவி.இந்த படம் எடுப்பது ஒரு சவாலான பணி ஏன் என்றால் செல்வி அம்மா மற்றும் புரட்சி தலைவர் எம் . ஜி. ராமசந்திரன் மற்றும் கலைஞர் கருணாநிதி யை தவிர்திட்டு இப்படத்தை எடுப்பது கடினம். ஆகையால் இப்படத்தை யாருக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் சொல்லிவிட கூடாது கத்தியின் மேல் நடக்கும் சவாலான விடயத்தை இந்த குழு கையில் எடுத்து அதனை கச்சிதமாக முடித்துள்ளது.


நேர்மறை விமர்சனங்கள் ( Positives ):

         1) தலைவி (Talaivi) இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு, ஒருவரின் சுய சரிதை என்பதால் வரலாற்றில் நடந்த செய்தி மற்றும் நிகழ்வுகளை அப்படியே படமாக்க வேண்டும் . பார்பவர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தினால் இடையே சில நகைச்சுவை காட்சிகளை புகுத்த முடியாது. செல்வி ஜெயலலிதாவின் நடிகை மற்றும் முதல்வர் வாழ்கையில் நடந்த முக்கிய சில தகவல்கள் மற்றும் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. வெளிவந்த 10% செய்திகள் மக்கள் நமக்கு முன்கூட்டியே தெரிந்தவை தான். அவர் வாழ்கையில் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் 1000 இருக்கலாம் ஆனாலும் சுயசரிதை படமாக முழு வீச்சாக எடுத்தாலும் மிகவும் நாடகத்தன்மையுன் இப்படம் சென்றுவிடும் என்றும வெரும் Documentary படம் போன்ற‌ உணர்வை கொடுத்து விடும் என்று‌ அவர் வாழ்கையில் நடந்த சில குறிப்பிட்ட சுவாரஸ்யமான சம்பவங்களை மட்டும் காட்சியாக எடுத்தால் ஒரு பக்கா commercial படமாக அமையும் என்பதால் எந்த மாதிரி காட்சி தேவையோ அதை மட்டும் காட்சிகளாக மாற்றி எடுத்துள்ளது இந்த குழுவின் திறைமையை காட்டுகின்றது.


    2) படத்தில் முதல் காட்சி, இடைவேளை காட்சி மற்றும் இறுதி காட்சி திரையரங்கு களில் விசில் பறக்கும். ஒரு  வாழ்க்கை வரலாறு (Bio pick) படத்தை போல் மட்டும் இல்லாமல் ஒரு Commercial படத்திற்கு தேவையான அனைத்து கதை மற்றும் காட்சி அமைப்பும் இதில் உள்ளது.சில இடங்களில் இப்படமானது மெதுவாக நகர்ந்தாலும்‌ அந்த இடத்தில் ஒரு வழி இருக்கும் அல்லது ஒரு பழிவாங்கள் இருக்கும் அந்த அளவிற்கு சரியாக திரை கதை இருக்கும்.


     3)  இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அருமையாக காதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். இதில் முக்கியமாக நான்கு நபர்களை மறுக்க முடியாது எம் ஜி ஆர்(MGR) ஆக நடித்த அரவித்சாமி( aravindsami) , ஜெயலலிதாவாக  நடித்த கங்கனா(kankana) மற்றும் கலைஞர் ஆக நடித்த நாசர் (Nasar), ஆர் எம் வீரப்பனாக சரியாக சமுத்திரகனி (Samuthrakani) நடித்து அசத்தியுள்ளனர்.


     4) ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் என்னும் அரங்கத்தில் ஒரு பெண்ணாக இல்லை இரும்பு பெண்ணாக ஒரு கட்சியை தலைமை தாங்க வரனும்னா எவ்வளவு அவமானங்களை தான்டி அந்த நிலைமைக்கு வந்திருக்க வேண்டும் என்பதை அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் கலே வாழ்ந்து இருக்கின்றார் கங்கனா. எடுத்துகாட்டாக ஒரு பாட்டு வரும் அதில் அரவிந்த் சாமி கங்கனா விடம் கேட்பார் ஆமா உன் கண்களில் என்ன தெரிகின்றது என்று அதற்கு கங்கனா என் கண்ணில் கனவு தெரிகின்றது என்று பழம்(Old) நடிகைகளின் கண்களில் கனவு என்பது எட்டு கண் சிமிட்டல்கள் இருக்கும் அதை அப்படியே நடித்து விட்டனர்.‌ எம் ஜி ஆர் (MGR) அவர்கள் மேடையில் பேசி விட்டு ஒரு கைத்துன்டால் வாயை துடைப்பார் அதை முதற்கொண்டு அப்படியே இப்படத்தில் முயற்சித்துள்ளனர்.


    5)  எம் ஜி ஆர் அவர்கள் நடித்துவிட்டு வெளியே வரும் பொழுது காத்து கொண்டிருக்கும் அவரின் ரசிகர்களை பார்க்க அந்த மேடையை விட்டு இறங்கும் அந்த காட்சி தத்ரூபமாக நடை ,உடை , பாவனை அரவிந்த்சாமி சரியாக நடித்துள்ளார். 


    6)  விசாலம் வாக்டரின் Vishal Viktor ஒளிப்பதிவு எதார்த்ததையும் இசையமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் (GV Prakash) பின்னனி இசையில் அசத்தி உள்ளார்.இதை தான்டி 1965-1991 அது வரை மட்டும் ஜெயலலிதா முதல்வர் ஆகும் வரைதான் இப்படம் தொழில்நுட்ப மற்றும் வசனங்கள் அனைத்தும் அருமை.


எதிர்மறை விமர்சனம் (Negative)


  1. இதில் படம் மெதுவாக செல்லும் போது அங்கு ஒரு வலி இருக்கும் என்றாலும் சாகச நகைச்சுவை ரசிகர்களுக்கு சில இடங்களில் அசௌகரிக்கும்.


  1. இதில் சில இடங்களில் Lip sync ஆகவில்லை.முக்கியமாக திருச்செந்தூர் மேடையில் நல்ல நடிப்பை கங்கனா வெளிப்படுத்தி இருந்தாலும் குரல் கலைஞர் சரியாக பொருந்தவில்லை.


  1. சில இடங்களில்  சில நடிகர்கள் கதாபாத்திரத்துடன் ஒட்டவில்லை.

கருத்துரையிடுக

1 கருத்துகள்