Who is Tamil Gaming? யார் இந்த தமிழ் கேமிங்?

   "TAMIL GAMING" என்பது பத்து வருடங்களுக்கு முன்பாக தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் (YouTube Channel) ஆகும். இதனை விவேக் மற்றும் பிரேம் (vivak and Pram) என்னும் இரு சகோதரர்கள் பத்து (10)  வருடங்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கேம் இன் சேனல் ஆக தமிழ் கேமிங் உள்ளது. (India's first gaming YouTube channel).


   விவேக் மற்றும் பிரேம் கேமர் (Vivek and prem gamers) என்னும் மற்றொரு சேனலில் WWE என்று சொல்லப்படும் மல்யுத்த வீடியோ கேம்களை மட்டும் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர். இவர்களின் யூடியூப் பயணத்தை இக்கட்டுரையில் காண்போம். 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளிலிருந்து யூட்யூபில் (YouTube)  என்னும் செயலியானது மக்களிடையே வரவேற்பை பெறத் தொடங்கியிருந்தது. 


    யூடியூப் ஆனது தொடங்கியதிலிருந்தே இலவசமாக கணக்கை உருவாக்கி அதன் மூலம் வீடியோக்களை அப்லோட் செய்யும் வசதி இருந்தது. அவ் வசதியை 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் இட் சகோதரர்கள் பயன்படுத்தி தொடர்ந்து தங்கள் விளையாடும் விளையாட்டுகளை பதிவேற்றி வந்தனர். பிறகு யூட்யூபில் பணம் சம்பாதிக்கும் முறை (Monetization) ஒன்று உள்ளது என தெரியவர அதனை பயன்படுத்தி மேலும் வீடியோக்களை வெளியிட்டு சம்பாதித்து வந்துள்ளனர். 


    யூடியுப் நிறுவனம் தனது செயலியை மெருகேற்றி நேரலை என அழைக்கப்படும் Live Stream செய்ய அனுமதி அளித்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட சகோதரர்கள் தினமும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை நேரலையில் தங்கள் விளையாட்டுகளை விளையாடும் மற்றும் வருணனையும் (Running Commentary) செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த சகோதரர்களுக்கும் தமிழ் கேமிங் என்னும் யூடியூப் சேனலுக்கு அதிகமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 


    இந்த ரசிகர்  பட்டாளத்தை‌ சரியான முறையில்பயன்படுத்திக் கொண்ட தமிழ் கேமிங் இரு வாரங்களுக்கு ஒருமுறை மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவருக்கு Crowd Fund மூலம் உதவி செயகிறது. பெரும்பாலான you tubers பணத்தை மட்டும் நோக்கமாக சென்று கொண்டிருக்கும் பொழுது இவர்கள் ஒரு புது முறையை கையாண்டு வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது. 


   இவர்கள் Pubg, freefire, Apex Legend  போன்ற ஒரே விளையாட்டுகளை தங்கள் சேனலில் போட மாட்டோம் என உறுதிபூண்டு உள்ளனர். அதனால் இவர்கள் story games என அழைக்கப்படும் கதையம்சம் கொண்ட விளையாட்டுக்களை அதிகமாக விளையாடுகின்றனர். மற்றும் Horror எனப்படும் திகில் (Ex. Granny) விளையாட்டுகளையும் மல்டி (Multiplayer games) பிளேயர் என அழைக்கப்படும் நண்பர்கள் கூட்டு விளையாட்டையும் இவர்கள் முயற்சிப்பார்கள். 


   Ni8hawk, Nandish , Rock Stone siva , Mr.IG, Android G , LoL gamer, Super CPK , Sai game zone ஆகிய யூடியூப் சேனல் நடத்துபவர்களும் இவருடன் இணைந்து விளையாடுவார்கள். தமிழ் யூ டியூப் கேமிங் கம்யூனிட்டி(Tamil YouTube community)  இன் இவர்களின் பங்கு இன்றியமையாதது. அதுமட்டுமன்றி தொடர்ந்து ஐந்து மணி நேரம் நேரலையில் கொரோனா  பாதித்த அவர்களுக்கான வென்டிலேட்டர் (ventilator) வாங்கி உதவ Croud fund செய்துள்ளனர் 5 மணிநேரத்தில் சுமார் 220k ருபாய் சேர்த்துள்ளனர்.. இவர்களிடையே மிகவும் பிரபலமான வாக்கியங்கள் உள்ளன அவற்றில் முக்கியமானது Nottu, Maththi ,Murugasan வார்த்தையாகும்.


1) " Human fall flat ' என அழைக்கப்படும் multiplayer game இல் Ni8hawk என்பவர் ஜட்டி மேன்(Jatty Man) என்னும் கதாபாத்திரத்தை இவர் செய்யும் சில்மிஷம் சிறப்பு.


 2) Nandish என்பவர் பழனிக்கு சென்று தரிசனம் செய்யாமல் வந்ததனால் அவரை பஞ்சாமிர்ததுக்கு கூட வக்கு இல்லாதவன் என்று கிண்டலாக சொல்வதுண்டு. 


 3)‌‌ Android G தமிழில் இருக்கும் ஒரு pewdiepie என்று நினைத்துக் கொள்வதால் தமிழ் கேமிங் இவரை "தமிழ்நாட்டின் pewdiepie" என்று அழைப்பார். 


    தமிழில் இருக்கும் ஒரு தவிர்க்க முடியாத மற்றும் இன்றியமையாத ஒரு யூடியூப் சேனல் ஆக Tamil gaming இன்று வரையில் திகழ்ந்து கொண்டிருக்கிறது.


 விளையாட்டு விரும்பிகள் ஒருவரேனும் இந்த சேனலை காணாமல் இருப்பது அரிது. சிறிய அளவில் தொடங்கி இருக்கும்  யூட்யூப் சேனல்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும், தூண்டுதலாகவும், விளங்கி கொண்டிருக்கிறது Tamil gaming.

கருத்துரையிடுக

0 கருத்துகள்