Story of Gilbert Times Youtube channel | Tamil

    Gilbert Times என்பது தமிழில் உள்ள ஒரு காமிக் மற்றும் ஹாலிவுட் படங்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் விரிவான விளக்கங்களை கூறும் ஒரு சேனலாகும். இதனை கில்பர்ட் மைக்கேல் (Gilbert vel Michael) என்னும் ஒரு நபர் மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி டெக்னாலஜி சம்பந்தப்பட்ட வீடியோக்களில் வேலை செய்துவந்தார். ஆனால் காலங்கள் செல்ல செல்ல இவர் தனக்குப் பிடித்த மற்றும் விருப்பமான காமிக்ஸ் மற்றும் திரைப்படங்களின் செய்திகளையும் வெளியிட்டு செய்திகளையும் படங்களின் தகவல்களையும் தெரிவித்து வருகின்றனர். 


      துமட்டுமன்றி ஹாலிவுட் திரைப்படங்களில் டிரெய்லர்கள்  (Trailer) வெளியாகும் போது அதில் இருக்கும் ரகசிய குறியீடுகளையும் மற்றும் சில Easter Egg என்று அழைக்கப்படும் வருங்கால படத்திற்கான ஒரு சிறிய குறியீட்டை புகுத்தி இருப்பர். அது வீடியோவில் எந்த பக்கத்தில் இருக்கின்றது எனவும் அதற்கான சரியான விளக்கங்களையும் அர்த்தத்தையும் ஒரு வீடியோவில் வெளியிட்டு அசத்துவார். நாம் பார்த்த you tuber களில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாத ஒரு யூடியூபர் (You tuber) ஆக இவர்களின் வீடியோ தெரிகிறது.  படத்திற்கான விளக்கங்களை கூறினால் அதில் அவருக்கு தெரிந்த செய்தியை மட்டும் கூறுவார்.தெரியாத செய்திகளை இந்த மாதிரி கூற விருப்பம் இல்லாதவர்.


     Michael மிகவும் பிடித்த ஒரு நடிகர் யார் என்றால் Rabert Downi Jr. இப்பொழுது Gilbert Times என்னும் சேனலை பற்றி காண்போம். Gilbert Times சேனலில் உள்ள மிகவும் பிரபலமடைந்த வீடியோ தொடரான Maervel அல்லது Dc அல்லது Marvel-Dc இடையேயான charector ஒப்பிட்டு யார் சிறந்தவர் மற்றும் யார் சக்தியில் அதிகமான மற்றும் திறமை  திறமை வாய்ந்தவரை   சரியான மற்றும் நியாயமான விமர்சனங்களையும் முடிவையும் வழங்குகிறது. 


     Hollywood பற்றிய செய்திகளை இணையதளத்தில் ஆங்காங்கே சிறிது சிறிதாக சிதறிக்கிடக்கும் செய்திகளை தொகுத்து ஒரு வீடியோவில் தரவல்ல மற்றும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு சேனலாகவும் உள்ளது. இச்சேனலுக்கு ஒரு சிறந்த, என்றும் மாறாத ரசிகர்கள் பட்டாளம் உள்ளது இவர்கள் அனைவரும் ஹாலிவுட் மற்றும் விரும்பி களாகவே உள்ளனர். இவர்கள் அனைவரும் ஹாலிவுட் மற்றும் காமிக் விரும்பிகள் ஆகவே இருக்கின்றனர். இவற்றில் தலைசிறந்த வீடியோவாக நாங்கள் கருதுவது கிங்காங் வெர்சஸ் காட்ஜில்லா (King kong vs godzilla) எனும் ட்ரெய்லரை பார்த்து அதில் இருக்கும் குறியீடுகளையும் அதிலிருக்கும் அர்த்தங்களையும் வெளிப்படுத்தி உள்ள வீயோவைதான்.

விமர்சனங்கள்:

இவரின்சேனலும் இவரைப் போன்றே உள்ள Mokka Commentary ரசிகர்களுக்கும் அடிக்கடி சில அசௌகரியங்கள் மற்றும் அவதூறுகள் ஏற்படும். தமிழில் ஹாலிவுட் படங்கள் மற்றும் காணிக்கை பற்றிய செய்திகளை முதன் முதலில் யூடியூபில் போட்டு யாரென்றால் Gilbert Times தான். சேனலுக்கு நமது இக்கட்டுரையின் வாயிலாகவும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்