Lets Make Education Simple சுருக்கமாக (LMES) என்பது ஒரு யூடியூப் சேனல் மற்றும் தன்னார்வ கல்வித் தொண்டு நிறுவனமாகும்(LMES foundation). இந்நிறுவனத்தை பிரேம் ஆனந்த்(prame anend) என்பவர் ஒரு உயரிய நோக்கத்துடன் தொடங்கியுள்ளார். முதலில் இவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளையும் அதனால் இவருக்கு ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாக தொண்டு நிறுவனத்தை தொடங்கியதையும் காண்போம்.
பிரேம் ஆனந்த் என்பவர் தமிழ்நாட்டில் பிறந்து ECE எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்(Electronic And Communication Engineering) படிப்பை முடித்து, அயல் நாட்டில் ஒரு வேலையை வாங்கி பணிபுரிந்து அங்கு இவருக்கு மாத வருமானமாக 5 லட்சம் வரை அந்நிறுவனதிடம் இருந்து வருமானம் பெற்று வந்துள்ளார்.
அப்பொழுது அங்கு இருக்கும் நண்பர்களிடம் அவர் பேசுகையில் அவருக்கு ஒரு உண்மை நிலவரம் தெரிய வந்தது அது என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் பாட திட்டங்கள் மற்றும் கல்வி அறிவு வெளிநாட்டில் இருக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் கல்வியறிவு இருக்கும் அதிக வேறுபாடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வெளிநாட்டு உடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஐந்து முதல் பத்து வருடங்கள் பழமையான பாடத்திட்டத்தினை தொடர்ந்து மாற்றாமல் அதே கற்பித்து வருவதினால் கல்வியின் தரம் மென்மேலும் நீர்த்து வருவதாகவும் இங்கு இருக்கும் கல்விமுறை சரியில்லை எனவும் தெரிந்து கொண்டார். இது இவரின் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது அனால் இவள் மீண்டும் தனது வேலையை முடித்து இந்தியாவிற்கு திரும்பி ஒரு யூடியூப் சேனல் (YouTube) ஐயும் தனது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் தொடங்கினார். முதலில் LMES என்னும் ஒரு யூட்யூபில் தொடங்கி அதில் அனைத்து குழந்தைகளுக்கும் புரியும் வகையில் புதிய புதிய டெக்னாலஜி கல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தினை கற்பித்தார்.
இவரின் வீடியோக்களில் இருக்கும் உண்மை தன்மையினால் இவருக்கு ரசிகர்கள் மற்றும் இவரின் வீடியோக்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் வரை வந்துள்ளது. இவர் தனது கருத்துக்களை யூட்யூபில் மட்டும் பதிவிடாமல் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு புரியும் வண்ணம் செயல் நுட்பத்துடன் கூடிய கல்வியை கருத்து மற்றும் உதவியும் செய்து வருகிறார். தனது குழுவினை விரிவுபடுத்திய பிரேமானந்த் chitte என்னுமொரு கல்வியியல் தொடர்பான செயலியை அதன் மூலம் புரியாத மிகவும் கடினமாக உள்ள பாடத்திட்டங்களை எளிய செயல்முறை விளக்கத்துடன் , மட்டுமல்லாமல் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்கு தனது Workshop எனப்படும் நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களுக்கு சிறந்த தரமான கல்வியை கொடுத்து வருகின்றார்.
பிரபல யூடியூபர் மதன் கௌரி(MADAN GOWRI) யுடன் இணைந்து kokru எனப்படும் தனிப்பட்ட செய்தி செய்தியையும் தொடங்கி சாதித்துள்ளனர் LMES குழுவினர்.
சர்ச்சைகளும் விமர்சனங்களும்: ராமர் பிள்ளை என்பவர் மூலிகை பெட்ரோல் என்ற பெயருடன் எரிபொருளை தயாரித்து அதை விற்பனையும் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அரசாங்கம் இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவரின் எரிபொருளை ஐஐடி மாணவர்கள் பரிசோதித்தும் என்னவென்று கண்டறிய முடியவில்லை இதனை LMES குழுவினர் அங்கு சென்று புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சோதித்த பொழுது அது ஒரு பெரிய மோசடி என்று தெரியவந்துள்ளது. இந்த மோசடியை ( Scam) வெளிப்படுத்தியதால் சில தமிழ் மொழி பற்றாளர்கள் ஒரு தமிழரின் கண்டுபிடிப்பு நீ தவறு என்று சொல்கிறாய் என்று அழுத்தமான விமர்சனங்களை வெளிப்படுத்தினர்.
1 கருத்துகள்
Merkur Futur Adjustable Safety Razor - Sears
பதிலளிநீக்குMerkur Futur Adjustable Safety Razor is the perfect worrione.com balance 출장샵 of performance, https://septcasino.com/review/merit-casino/ safety, and 바카라 사이트 comfort. Made in Solingen, Germany, 바카라 this razor has a perfect balance of