Labam Tamil Movie Review

        Tamil Movies Da வழங்கும்    நேர்மையான மற்றும் சரியான சினிமா விமர்சனங்கள். இன்று நாம் காணக்கூடிய படம் விஜய் சேதுபதி , கலையரசன், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, நடித்து வெளியாகியிருக்கும் படம் தான் லாபம். லாபம் என்னும் இப்படத்தை எஸ்பி ஜனநாதன் (SP Jananathan) என்பவர் இயக்கி உள்ளார் மற்றும் டி இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி இருக்கும் இந்நிலையில் இதன் இயக்குனர் ஜனநாதன் மறைந்துவிட்டார். இப்படம் சரியாக Editing இருக்கும்போதே இதன் இயக்குனர் இயற்கை எய்திவிட்டார் அதனால் துணை இயக்குனார் மற்ற தொழில்நுட்ப (Technician) கலைஞர்களும் தான் இந்தப் படத்தை முழுமையாக முடித்து இப்பொழுது வெளியிட்டுள்ளார்கள். 

    
        இதையெல்லாம் தவிர்த்து ஒரு சாதாரண மனிதனுக்கு இப்படம் ஏற்படுத்தும் விளைவுகளையும் அவனுக்கு ஏற்படுத்தும் பொழுதுபோக்கை பற்றிய தான் காணப்போகிறோம். இதுவரை தமிழ் சினிமாவில் (Tamil Cinema) 
 நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பற்றிய கதைகள் வெளிவந்துள்ளது. அப்பட்டியலில் வெளிவந்திருக்கும் ஒரு கதை தான் லாபம். இதற்கு முன் ஜெயம் ரவி(Jayam Ravi)  நடித்து வெளியாகி ஒரு பெரும் தோல்வி அடைந்த விவசாயி பற்றிய படம் Boomhi ஆகும். இதனால் இக்காலத்தில் விவசாயிகள் பற்றிய கதை களம் ரசிக்க முடியாதபடி உள்ளது என்று சிலர் கருதுகின்றனர் ஆனால் அது உண்மை இல்லை திரைக்கதையும் கதையும் ஒரு படத்தின் முதுகெலும்பு போன்றவை அது சரியாக இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.
 
  
        80s மற்றும் 90s பொதிகை(Pothikai) தொலைக்காட்சி (Tv show) தொடரில் அரைமணிநேரம் வெளிவரும் வயலும் வாழ்வும் (Vayalum Valvum) என்ற தொலைக்காட்சித் தொடரில் விவசாயம் மற்றும் இயற்கை பற்றிய செய்திகளையும் உரங்கள் போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி வந்தனர். லாபம் இன்னும் இப்படமானது பொதிகையில் வெளிவந்த வயலும் வாழ்வும் எனும் நிகழ்ச்சியை அப்படியே எடுத்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது. கதை‌ ஒரு விவசாய சங்க தலைவராக தோன்றும் நடிகர் விஜய்சேதுபதிக்கு வில்லனாக ஒருவன் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் ஸ்டெர்லைட் போன்ற இயற்கை விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் மண்ணை மலடாக்கும் சில திட்டங்களை கொண்டு வருகிறார். 

     இதில் காட்டப்படும் சில தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப்பில்(What's app) ஷேர் செய்யப்படும் பொய்யான மற்றும் குறுந்தகவல்களை கொண்டு விளங்குகிறது. இத்திட்டங்களை எதிர்த்து விவசாயசங்க தலைவனான விஜய்சேதுபதி அந்நிலங்களை (Lands) காப்பாற்றுகிறான் இல்லை வில்லனிடம் தோற்று போகிறானா என்பதுதான் ஒரு வரிக் கதை. 

     
        அதுமட்டுமின்றி விவசாயிகள் நாள் எதனால் அவர்கள் விளைவித்த பொருளுக்கு விலையை நிர்ணயிக்க முடியவில்லை இடைத்தரகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மட்டும் விலையை நிர்ணயிக்கின்றனர். இதற்குப் பின்னே இருக்கும் பொருளாதாரம் (Economics) மற்றும் லாபம் என்றால் என்ன அதற்கான அர்த்தம் என்ன இதைப்பற்றி அளவுக்கு அதிகமான தகவல்கள் இப்படத்தில் உள்ளது. இதைப் போன்ற விவசாயம் சார்ந்த தகவல்கள் அரைகுறையாக தெரிந்த சிலருக்கு இதன் மீது சிறிது ஆர்வம் ஏற்பட்டு இவ்வளவு செய்திகள் இருக்கின்றன எனத் தோன்றும். ஜனநாதன் இயக்கி வெளிவந்த மற்றொரு படமான பேராண்மை (Peranmai) என்னும் படத்தில் Capitalism என்றால் என்ன என்று ஒரு சிறிய காட்சி மூலம் தெளிவாக விளக்கி இருப்பார். இதேபோன்றே லாபம் என்னும் இப்படத்திலும் அதிகமான காட்சிகள் வருவதனால் பார்க்கும் நமக்கு அசௌகாரியத்தையும் சலிப்பையும் ஏற்படுத்துகின்றது. 
      
        விஜய் சேதுபதி (Vijay sethupathi) என்ன தான் ஒரு சிறந்த மற்றும் மக்கள் போற்றும் கதாநாயகனாக (Hero)  இருந்தாலும் அவர் இப்படத்தில் சொல்லும் கருத்துக்களும் வசனங்களும் படம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருப்பதனால் இதனை பார்க்கும் மக்களிடம் சலிப்பையும் (Boaring) பொறுப்பையும் ஏற்படுத்துகின்றது. இதனை ஒரு சிறிய விமர்சனமாக கூற வேண்டுமென்றால் வயலும் வாழ்வும் என்ற நிகழ்ச்சி சுமார் இரண்டரை மணிநேரம் விவசாயிகளின் கஷ்டங்கள் மற்றும் பொருளாதாரத்தை எடுத்துரைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் ஆனால் அது எப்படி இருக்குமோ அதே போன்ற ஒரு அறிவிப்பை ஏற்படுத்துகின்றது லாபம் என்னும் இப்படம். 

   

        அடுத்ததாக இப்படத்தின் இசை ஆனது சில இடங்களில் சரியாக புரிந்து இருந்தாலும் பல இடங்களில் இருந்தாலும் சற்று சத்தம் அதிகமாக இருப்பதனால் படத்திற்கு ஏற்ற ஒரு இசையாக ஒன்றவில்லை. சில இடங்களில்‌ Editing சரி வரும் முடிக்காமல் இருப்பது நம் பார்ப்பவருக்கு நன்றாக தெரிகிறது இதன் காரணம் என்னவென்றால் ஜனநாதன் இருந்து விட்டதனால் அவசர அவசரமாக இப்படத்தினை முடித்து நம்மிடம் கொண்டு சேர்த்தது ஆகவே தெரிகிறது. அதனால் இது முழுமை பெறாத ஒரு படமாகத்தான் இருக்கின்றது. அடுத்ததாக கதாநாயகி சுருதிஹாசனை பற்றி பார்ப்போம் இப்படத்தில் இவர் ஒரு நடன கலைஞராக கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் பெயர் கிளாரா Clara. இவர் அடிக்கடி Clara the dancer என்று கூறிக் கொண்டே இருப்பதனால் பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலாகவும் இப்படத்தில் கதாநாயகி தேவையில்லை என்ற ஒரு எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றது. சரியான குழு இருந்தாலும் விவசாயத்தை பற்றி மிகைபடுத்த பட்டுள்ளதால் படம் சாதாரணம் என்ற அளவில் தான் உள்ளது.

                      *****நன்றி*****

கருத்துரையிடுக

0 கருத்துகள்