GP muththu Entered BigBoss Season 5 tamil?

    தமிழ் தொலைக்காட்சி துறையில் அதிக பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் (BigBoss) ஆகும். இத்தொடரின் முதல் சீசன் ஆனது 2017 ஆம் ஆண்டு தொடங்கி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து நான்கு சீசன்கள் வெளியாகி முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2021 அக்டோபர் மாதம் இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. கடந்த காலங்களைப் போலவே இந்நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.



    சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருந்த டிக்டாக்கில் புகழ்பெற்ற ஒரு ஒருவராக இருந்தவர் ஜி பி முத்து அவரின் நிகழ்ச்சிக்கு செல்வதாக ஒரு வதந்தி நிலவியது. இவர் டிக் டாக் (TikTak) செயலி தடை செய்யப்பட்ட உடன் மீண்டும் சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப் வேலைக்கு ( YouTube ) சென்று ஜி பி முத்து(GP muththu official) என்னும் ஒரு யூடியூப் சேனலில் நடத்தி வருகிறார். இவர் தனது யூடியூப் சேனலில் அவர் ரசிகர்களின் கடிதங்களையும் Paper ID அவர்களின் கடிதங்களையும் படித்து நிறைய நபர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் மற்றும் சிரிப்பலையை ஏற்படுத்துகிறார். 


    டிக்டாக்கில் உள்ள பொழுதே இவரை திட்டிய ரசிகர்கள் மற்றும் பேப்பரை ID கள் இவர் யூடியூபே க்கு மாறியவுடன் இவரது மிகப்பெரிய ரசிகர்கள் ஆக மாறி விட்டு அன்பு செலுத்துகின்றனர், இதற்கு ஆதாரமாக இவரின் யூடியூப் சேனலில் 10 லட்சம் (1M subscribers) பார்வையாளர்கள் உள்ளனர். 


      ரசிகர்களும் இவர் பிக் பாஸ் சீசன் பையில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆதரவு தெரிவித்தனர் அதுமட்டுமல்லாமல் விஜய் டிவி தரப்பிலிருந்தும் இவருக்கு அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இவர் BiggBoss வீட்டிற்கு வெளியே நின்று புகைப்படத்தை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார் அதனை மதன் கௌரி (Moden Gowri) எச்டி போன்ற பிரபல யூடியூப் சேனல்கள் பகிர்ந்து வருகின்றனர்.


     ஜி பி முத்து தரப்பிலிருந்து ஒரு புதிய செய்தி கிடைத்துள்ளது ஜி பி முத்து தொடர்ந்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருவதால் அந்த தேதிகளுக்கு ஏற்ப பிக்பாஸ் நிகழ்ச்சி அமையும் ஆனால் அவர் அதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார்.ஆனால் இந்த படங்களின் தேதிக்கு குறிக்கிடும் ரீதியாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தால் அவர் அதில் பங்கேற்க மாட்டார் எனவும் கூறியுள்ளார். 


      செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்து பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்வார்கள் அதிலிருந்து 30 நாட்கள் கழித்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கும். இதற்குள் அவர் அதிகபட்சமாக தனது ஒப்பந்தம் செய்த அனைத்து படங்களையும் நடித்து விட்டு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல 99% வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 ஜி பி முத்து -விற்கும் போட்டியாளர்களுக்கும் இடையே ஏற்படும் சண்டைகளையும், ஜிபி முத்து-விற்கும கமல் இடையே ஏற்படும் உரையாடலையும் கேட்க ரசிகர்களும் தமிழக மக்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். நமது வலைத்தளத்தின் மூலமாக அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்