PARIDHABANGAL GO-SU Scam issue details in Tamil

     பரிதாபங்கள் (Paridhabangal) என்னும் யூடியூப் சேனல்(YouTube Channel) ஆனது மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் தற்கால நிகழ்வுகளை நகைச்சுவையுடன் சொல்லும் ஒரு சேனலாகும்.  கோபி (Gobi) மற்றும் சுதாகர் (Sudager)   என்ற இரு கல்லூரி நண்பர்களால் தொடங்கப்பட்டது சேனல் இவர்களின் திறமையின் காரணமாக இவர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை 40 லட்சத்துக்கும்(4.5 M subscriber) மேல் அதிகமானது.


     கோபி என்பவர் மிமிக்ரி(Mimicry) எனப்படும் பலகுரல் வித்தையில் தேர்ந்தவர் ஆகையால் இவர் பல திரை பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் குரலில் பேசி அசத்துவார்.‌ சுதாகர் எனப்படுபவர் தனது நகைச்சுவை கலந்த தோனியுடன் பேசும் சொற்களாலும் மற்றும் தனது முக பாவனைகளும் மக்களை சிரிப்பலையில் ஆழ்த்துவார்.ரசிகர்கள் இவர்களின் மேல் அதீத நம்பிக்கையும் பற்றும் கொண்டிருந்தனர் . ஆனால் ரசிகர்களை இவர்கள் நல்ல வழியில் பயன்படுத்தினார் என்ற கேள்விக்கு இல்லை என்று தான் பதில் கூற முடியும்.


      கஜா புயல் (Gaja cyclone) தாக்கியபோது found melon என்ற செயலி மூலம் 35 லட்சம் ரூபாய் நிதி திரட்டி தருவதாகச் சொல்லி அதனை தொடர்ந்து Grud Fund மூலம் திரைப்படம் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அளித்த தொகை மூலம் 6 கோடி ரூபாய்க்கும் மேலான நிதி கிடைத்துள்ளது.crowd fund மூலம் இவ்வளவு அதிக தொகை கிடைத்தது கோபி சுதாகர் ஜோடிக்கு தான் என்கின்றனர் இதற்கு நன்றி தெரிவித்து இருவரும் ஒரு வீடியோவை வெளியிட்டனர்.


   " Hey money come today go Tomorrow ya" என்ற தலைப்பில் திரைப்படம் தயாரித்து வருவதாக அறிவிப்பு வெளியானது.Movie Name என்ற நிகழ்ச்சியில் மட்டும் பிரபலங்களை பங்கேற்க வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படத்தயாரிப்பு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஒரு அறிவிப்பு கூட வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. 


     யூட்யூபில் Jason Samual என்பவரிடம் GO-SU SCAM என்ற தலைப்பில் இரண்டரை மணிநேர வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அதில் SUPER BACKER என்னும் செயலி அதன் வழியாக பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.‌ குறிப்பாக SUPPER BACKER என்ற செயலில் 500 ரூபாய் செலுத்தினால் தினசரி ஒரு சதவீதம் (1%) லாபம் நமக்கு கிடைக்கும் என்று விளம்பரம் பரிதாபங்கள் சேனல் வெளியாகியிருந்தது சுட்டிக்காட்டியுள்ளார். பரிதாபங்கள் மட்டுமே பிரபலமான Fund melon செயலின் பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதாகவும் ஜான்சன் சாமுவேல் புகார் எழுப்பியுள்ளார்.  இந்த மோசடியில் இருவரும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

   

  

      இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து மற்றும் கேபி சுதாகர் இருவரும் இது குறித்து விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சூப்பர் Backer செய்தி குறித்து தாங்கள் விளம்பரம் மட்டுமே வெளியிட்டதாகவும் தங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் தங்கள் "money come Tomorrow go" ஒரு திரைப்படத்தின் தயாரிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதன் மூலமாக நிதி அளித்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் அது குறித்த அப்டேட் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.


      கோரோனாவால் தங்கள் குழு கடுமையாக பாதிக்கப்பட்டதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விரைவில் Teaser வெளியிடப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர் அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தனர். crowd Funding நிதி அளித்தவர்களுக்கு என்னவகையான அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அதன் சாமுவேல் தனது வீடியோவில் காட்டியுள்ளார்.


video link : WATCH


கருத்துரையிடுக

0 கருத்துகள்