Free Guy Movie Review In Tamil

  Ryan Reynolds நடிப்பில் Shawn Levy இயக்கத்தில் வெளியான ஒரு அமெரிக்கன் அறிவியல் (Si-Fi comedy) புனைக்கதை  மற்றும் அதிரடி நகைச்சுவை‌ Free Guy என்ற படத்தின் திரைவிமர்சனத்தை இக்கட்டுரையில் காண்போம்.


     கதை: படத்தின் கதாநாயகன் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகின்றார் அவருக்கு ஒரு நண்பன் சந்தோசமான வாழ்க்கை இப்படி சென்று கொண்டிருக்க ஒரு பெண்னை பார்த்து காதல் வயப்படுகின்றார் ஆனால் ஒரு தருணத்தில் இவருக்கு உண்மை புரிகிறது இவர் வாழும் உலகம் ஒரு உண்மை உலகம் கிடையாது ஒரு Online Gaming இல் உள்ள ஒரு‌ உலகம் ஆனால் இதுவரையும் இவரின் கதாபாத்திரம் NPC எனப்படும். அதாவது நாம் விளையாடும் Ps2, Ps4  போன்ற விளையாட்டுகளில் நாம் ஒரு கதாப்பாத்திரத்தை வைத்து ஓட அல்லது குதிக்க போன்ற செயல்களுக்கு கட்டளை இடுவோம் ஆனால் இந்த ஒரு கணினி இயங்கு கதாபாத்திரம் யாரும் விளையாடாத தானாக முன் நிரல் Coding படுத்தப்பட்ட செயலில் மட்டுமே இயங்க முடியும் இது போன்று ஒரு NPC ஆக உள்ளார். தன்னை வெளியில் இருந்து யாரும் கட்டுபடுத்தவில்லை ஆனால் அந்த உலகத்திற்குள் இருக்கூடிய சில கதாபாத்திரங்கள் வெளி மனிதர்களாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு தருனத்தில் தான் ஒரு Dommy charector என கதாநாயகனுக்கே தெரியவர அதன் பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் தான் படத்தின் மொத்த கதையே.இந்த படத்தில் பல இடங்களில் நீல சட்டை எங்கே நீல சட்டை எங்கே என்று கேட்டு கொண்டே இருக்கின்றனர் படம் முழுவதும் ஏன்னெனில் கதாநாயகி வீட்டில் இருபதிற்கும் மேற்பட்ட நீல சட்டையை தொங்கவிடப்பட்டுள்ளது.


நேர்மறை விமர்சனங்கள் (Positives)


    இந்த படத்தின் கதைக்களம் தான் நமது சராசரி வாழ்கையை எடுத்து கொள்ளவும் காலையில் எழுகிறோம் சாப்பிடுகிறோம் நேராக வேலைக்கு செல்கிறோம் முடிந்த பிறகு மாலையில் வீடு திரும்புகிறோம் யூடிப் பார்கிறோம் அல்லது Tamil movies da படிக்கின்றோம். திடீர் என்று ஒருவன் வந்து நீங்கள் வாழும் உலகம் உரு உண்மை உலகமே கிடையாது நீங்கள் வெரும் ஒரு கதாபாத்திரமாக தான் நாளையுடன் இந்த ஆன்லைன் விளையாட்டில் உள்ள அனைத்தையும் அழிக்க போகின்றது Delete ஆதாவது நீங்கள் இறக்க போகின்றனர் என்று சொன்னால் எப்படி இருக்கும் அந்தமாதிரி ஒரு சுவாரஸ்யமான கதைக்களம் இருந்தாலும் முதல் முறையாக சிந்தித்து வடிவமைக்கப்பட்டு இந்த கதை எழுதப்பட்டது என்று கூற முடியாது. 2012 இல் ரிக்கிட் ரால்ப் என்னும் அனிமேசன் படம் ஒன்று வெளியானது இதன் இரண்டாம் பாகம் 2018 இல் வெளியானது. இந்த இரண்டு படத்தின் கதையை பிரட்டி உருவாக்கப்பட்ட படம் தான் இது.


    அதே மாதிரி Ready player 1 என்ற படத்தின் சில காட்சிகளின் கதை மற்றும் சம்பவங்கள் தென்பட்டாலும் இதை போல இப்படம் எடுக்கப்பட்டாலும் இக்கதையும் மிகவும் சுவாரசியமாக எடுத்துள்ளனர். அது எந்த அளவிற்கு ரசிகர்களுக்கும் பார்வையாளர்களும் நகைச்சுவை தருனங்களும்  அதிரடி தருனங்களும் எப்படி திரைக்கதை நகர்த்தப்பட்டது என்பதும் மிகவும் நன்றாக உள்ளது.


இந்த படத்தின் Cinematographer George Richmond தனது பனியை சிறப்பாக செய்துள்ளனர்.ஆனால் 360 கோணதிற்கு பச்சை திரையை (Green Screen) வைத்து நடிகர்களின் முழு பங்களிப்பையும் பெற்று காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றது. George Richmond தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சி முழுமைக்கும் செலுத்தி ஆனாலும் இந்த படத்தின் VFX காட்சிகளும் sound effect சரி பின்னி ஒதறி இருக்கின்றனர்.இப்படத்தை திரையரங்குகளில் பார்த்தால் வேறு விதமான அனுபவத்தை குடுக்கும் ஏன்னென்றால் அவ்வளவு பெரிய திரையில் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தளிக்கும்.இதை தவிர்த்து திரையரங்குகளில் இந்த படமானது Sound Design அசத்தி இருக்கின்றது.


   இப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிப்பு அவர் அவர் கதாபாத்திரத்தை மிக கட்சிதமாக மற்றும்  Hollywood படங்களில் பொதுவாக கதாபாத்திர வடிவமைப்பு சரி இல்லை என்றாலும் அவர்களின் நடிப்பு இன்றி அமையாது மற்றும் அளப்பரியது. இருந்தாலும் Ryan Reynolds மற்றும் Shawn Levy அவர்களின் நடிப்பில் அசத்தி இருக்கினறனர். இதில் தமிழ் படம் போன்று இரண்டு காட்சிகளில் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு காதல் வந்தது ஆனால் இந்த படத்தில் இருவரின் கண்களிலும் காதல் பரிமாற்றம் நமக்கு தெரிகின்றது மற்றும் கதாநாயகன்    காட்டுனா நாயகியை தான் கட்டுவேன்னு சொல்வது அவர்களின் கண்களில் தெரிந்தது. இந்த படத்தில் நகைச்சுவை என்பது நன்றாகவே எடுபட்டுள்ளது. ஏன்னென்றால் Comedy என்பது சரியாக பார்வையாளர்களிடம் செல்வது கடினம் ஆனால் இப்படத்தில் அது சரியாக உள்ளது. பயந்துட கூடாது என்று நாயகி சொல்லும் போது நாயகன் உனக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்கும் போது ஒரு சிரிபலையை ஏற்படுத்தும்.


எதிர்மறை விமர்சனம் (Negatives)


     இந்த படத்தில் Villain கதாபாத்திரம்  வலு இல்லாமல் இருக்கின்றது சற்று வலுவானதாக எழுதி இருக்கலாம் மேலோட்டமாக எழுதி உள்ளனர்.


மொத்தமாக இந்த படம் மகிழ்ச்சியாக பார்ககூடிய ஒரு படம் தான் இது ஆனால் இரு கட்டாயத்துக்கு

 1) திரையரங்குகளில் மட்டும் தான் கண்டுகளிக்க முடியும்.

2)இப்படம் பொருத்தவரை ஆங்கிலம் படம் அதிகம் பார்த்து வசனத்தை புரிந்தால் தான் நகைச்சுவை காட்சிகளில் சிரித்து ரசிக்க முடியும்.

Subtitles படித்து சிரித்தாலும் படிப்பதற்கும் அடுத்த காட்சி வந்துவிடும் அதனால் தமிழ் ரசிகர்கள் ரசிப்பது கடினம்.

                  ***** நன்றி*****

TAMIL MOVIES DA RATING: 7.25/10
கருத்துரையிடுக

0 கருத்துகள்