Black Widow Movie Review And Story

     MARVEL Cinematic University இல் இருந்து Cate Shortland இய்ககத்தில்  Disney + Hotstar இல் வெளியான 24 வது படம் தான் Black Window என்னும் அதீத சக்திகளை உடைய பிளாக் விடோ என்னும் கதாநாயகியின் படம்.இப்படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை தான்‌ கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.


கதை: 

The black widow என்னும் ஒரு கதாபாத்திரத்தின் Avengers குழுவில் எவ்வளவு முக்கியமான ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரம் என்று நமக்குத் தெரியும் ஆனால் இந்த கதாபாத்திரத்தின் கடந்த காலத்தில் என்னென்ன நடந்தது என்று என்பதுதான் இப்படத்தின் மொத்த கதையாகும்.


நேர்மறை விமர்சனங்கள் (Positive):


 1) முதலில் இப்படத்தின் அதிரடி மற்றும் சாகச காட்சிகள் தான் அற்புதமாக சொல்லி அடித்திருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் ஆக்சன் சீக்வென்ஸ்(Action Sequences) என்று சொல்கிறோமே இதற்கு பின்னாடி எத்தனை துறைகளின் கடினமான உழைப்பு இருக்கும் என்பதை நாம் இக்கட்டுரையில் சொல்லித்தான் ஆகணும்.Cabral இவர்தான் படத்தின் cinematographer அவர் கேமராவில் வைத்த ஒரு ஒரு Angle-ம் மிகச் சரியாக பரபரப்பாக இருக்கும் அளவிற்கு படமாக்கப்பட்டுள்ளது. அதேமாதிரி இப்படத்தின் Action -choreographer எந்த அளவிற்கு முனைப்பாக பரபரப்பை கொடுக்கக் கூடிய அளவிற்கு நிறைய புது விடயங்களை செய்திருக்கின்றனர் அது நமக்கு புல்லரிப்பு ஏற்படுத்துகின்ற அளவிற்கு இருக்கின்றது.


2) Leigh Folsom Boyd மற்றும் Matthew Schmidt இவர்கள் தான் இப்படத்தின் Editor படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஒவ்வொரு சண்டை மற்றும் அதிரடி காட்சிகளையும் நாம் முழுமையாக உணர வேண்டும் என்றால் அது ஒரு Editor கை வண்ணத்தில் தான் அப்படத்தில் கொண்டுவர முடியும். அந்த அளவிற்கு Neat ஆக பங்களிப்பை கொடுத்துள்ளனர்.


3)அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் உள்ள Over All VFX works அதுவும் முக்கியமாக Action சண்டைக்காட்சிகளில் அருமையாக உள்ளது.95% எங்கயுமே திருப்தி அளிக்காத வரை ஒரு இடத்தில் கூட அவ்வளவு தரமாக VFX வேலைப்பாடுகள் தான் இப்படத்தின் முழுவதும் ஒரு ஒரு காட்சிகளையும் அருமையாக கொண்டு வந்துள்ளனர்.


4) இது எல்லாத்தையும் தவிர்த்து படத்தில் ஒலி கலவையின் ( sound design) அமைப்பு sound editing போன்ற எல்லாத் துறைகளிலும் மிக நுண்ணிய மான வேலைப்பாடுகள் உள்ளது அதில் எவ்வளவு வேலை செய்திருக்கிறார்கள் என்று இப்படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.


5) இப்படத்தில் பங்கு பெற்ற அனைத்து நடிகர்களின் நடிப்பும் அனைவரும் தான் எடுத்த கதாபாத்திரத்தை முழுமையாக ரசிக்கும்படி செய்திருக்கின்றனர். குறிப்பாக மூன்று அல்லது நான்கு கதாபாத்திரங்களின் பெயரைக் கூறிய ஆகவேண்டும். Scarlett Johansson தான் எடுத்த black widow இன்னும் கதாபாத்திரத்தை குற்றம் கூறாத படி நடித்திருக்கின்றனர். அவரை பற்றி நமக்கு தெரியும் இதுவரை கண்ட படங்களிலே அவரின் நடிப்பு திறமையை கண்டிருக்கிறோம். black widow என்னும் கதாபாத்திரத்தை அவர்கள் தவிர வேறு யாரும் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. அதே மாதிரியே Florence Pugh அவர்களுடைய நடிப்பும் சரி David Harbour உடைய நடிப்பும் சரி எல்லோருமே அவரவர்களுடைய கதாபாத்திரத்தை எந்த அளவிற்கு தத்ரூபமாக திரையில் கொண்டுவர முடியுமோ முயற்சித்துள்ளனர்.


எதிர்மறை விமர்சனம் (Negatives):


முதலில் இப்படத்தில் இருக்கக்கூடிய ஒரு இணைப்பு (connect) இந்தப் படம் ஒரு படம் ஓடுகிறது என்று தான் பார்க்கிறோமே தவிர தனிப்பட்ட முறையில் ஒரு பிணைப்பை (Personal connect) அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் ஏற்படவில்லை . காரணம் என்னவென்றால் இந்தப் படம் 10 நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு இடத்திற்கு(Location) மாறிக் கொண்டே இருப்பதனால் கடைசியில் என்ன நடக்கும் அந்த villain னைப் பழிவாங்க வேண்டும் அதுதானே என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது. இத்தனைக்கும் ஒரு சாதாரண அதிரடி சண்டை படத்தில் என்னென்ன காரணிகள் இருக்குமோ அதுமட்டுமில்லாமல் குடும்ப உணர்ச்சி காட்சிகளும்(family sentiment) ஆங்காங்கே காணப்படுகிறது. இருந்தாலும் படத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடையே எந்த ஒரு பிணைப்பை ஏற்படுத்த வில்லை. மற்றொரு இப்படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு முக்கியமாக villain கதாபாத்திரம் அவர்தான் தன்னை தீயவராக காட்டிக்கொண்டாலும் நமக்கு அவரை villain என்று பார்க்க முடியவில்லை. அவர் வருவதே வெறும் 5-6 காட்சிகளில் மட்டும்தான். villain கதாபாத்திரத்திற்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தால் தான் பார்க்கக்கூடிய ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டி சீட்டின்(seat) நுனியில் அமர வைத்து படத்தை பார்க்க வைக்கும்.


2) பிளாக் விடோ உடைய கதாபாத்திரத்தை விட தன்னுடைய கதாபாத்திரம் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்தே தெரிகிறது படத்தில் எந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் யாரை நம்பி பார்வையாளர்கள் வருவார்கள் என்ற குழப்பத்துடனே கதையை எழுதி திரைப்படம் ஆக்கிவிட்டனர்.


இறுதி: 

ஒரு சாதாரண ரசிகனின் கண்ணோட்டத்தில் கூட்டத்தை பார்த்தால் இது ஒரு சராசரியான அதிரடி சாகச திரைப்படம் அவ்வளவுதான். மார்வெல் சினிமாட்டிக் இவரின் இருபத்தி நான்காவது படம் அதனால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துடன் எங்கள் இப்படத்தைப் பார்த்தால் உங்களுக்கு சிறிது ஏமாற்றம் ஏற்படும். U | A சான்றிதழ் படம் ஆதலால் உங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

                   *****நன்றி*****

TAMIL MOVIES DA RATING :6/10

கருத்துரையிடுக

0 கருத்துகள்