விஜய் டிவியில்(Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்னும் தொடரானது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அதிக மக்கள் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி தொடராக உள்ளது. இதில் பாக்கியலட்சுமி (bakkiyalakshmi) ஜோடியாக வரும் கோபி (Gobi) என்பவருக்கு ராதிகா (Rathika) எனும் முன்னாள் காதலியுடன் மீண்டும் நெருக்கம் ஏற்படுகிறது. அவரின் காதலி ராதிகாவிடம் இருக்கும் தொடர்பை மறைக்க கோபி செய்யும் காரியங்கள் ரசிகர்களிடையே மிகவும் நகைச்சுவையாக உள்ளது.
பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் இவருக்கு ஒரு காதல் ஏற்படுவது புதுமையாக உள்ளது இங்கே அந்த இயக்குனரின் திறமையை நாம் காணலாம். இதில் ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால் இவர் தன்னுடைய காதலியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை அவரது மகன் கண்ணால் பார்த்து விட்டதால் அவரது மனைவிக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து அவரது மனைவியை சமாளிக்கிறார். இந்தக் கதையின் முதல் பதிப்பு பெங்காலி மொழியில் (Bengal) வெளியிடப்பட்டது அதன் பெயர் ஸ்ரீமுகி (Srimuki) என்னும் தொலைக்காட்சித் தொடரின் ரீமேக்காக தான் இந்த பாக்கியலட்சுமி இருக்கிறது.
அந்தப் பெங்காலி பதிப்பில் என்ன கதை தொடர்கிறது என்றால் கோபிக்கு ராதிகா என்னும் ஒரு காதல் இருக்கிற மாதிரி பாக்கியலட்சுமி-க்கு பள்ளி காதலன் ஒருவன் இருக்கின்றான் என்பது தெரிகிறது. இந்த பெங்காலி தெடரின் தமிழ் பதிப்புதான் பாக்கியலட்சுமி என்பதால் அதே கதைகளம் தமிழுக்கு வர வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.
அதை வலுப்படுத்துகிறது வகையில் வரவிருக்கும் பாக்கியலட்சுமி தொடர்பில் கூறப்பட்டிருப்பது பாக்கியலட்சுமி மகளின் பள்ளிக்கு தாய் தின சிறப்பு நிகழ்ச்சிக்கு பாக்கியலட்சுமி செல்கின்றார் அப்பொழுது அந்தப் பள்ளி காதலும் காதலும் அங்கு வருகின்றான் அப்பொழுது இருவரும் சந்தித்து கொள்ளுமாறு கதைக்களம் இருக்கலாம். இப்படியான கதைக்களம் அமையவே கூடாது என்று என ரசிகர்கள் கடவுளை வேண்டி வருகின்றனர் சில ரசிகர்கள் இதுபோன்ற நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்கின்றனர் உங்களின் கருத்து வரவேற்க படுகிறது.
இதுபோலவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா (Barathi kannamma) என்னும் தொலைக்காட்சி தொடரில் கார்த்திகை தீபம் (karththikai thipam) என்னும் பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது அதில் இருக்கும் கதை என்னவென்றால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து பத்து வருடங்களுக்குப் பிறகும் பெண்பா (Venba) என்பவர் பாரதி ஒரு முக்கியமான நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த நிலையில் தன்னை தாலிகட்டி என்று வற்புறுத்தி கூறுகின்றது போல் ஒரு காட்சி அமைந்துள்ளது. இதே போன்று காட்சி தமிழிலும் வரக்கூடாது என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். காரணம் என்னவென்றால் ஒரே கதையை சுமார் இரண்டு வருடமாக ஜவ்வு போன்ற இழுத்து வருகின்றனர் பாரதிகண்ணம்மா படக்குழுவினர்.
ஒரு பத்து வருடமாக டிஎன்ஏ டெஸ்ட்(DNA test) எடுக்காமல் தொடர்ந்து காலம் தடுத்து வருகின்றனர் ஒரே காட்சிமீண்டும் மீண்டும் அமைக்கப்படுவதால் ரசிகர்களிடையே மிகவும் வெறுப்பை ஏற்படுத்துகிறது இருந்தாலும் இந்த தொலைக்காட்சி தொடருக்கான வரவேற்பு குறைந்தபாடில்லை.
*****நன்றி (Thank you)*****
0 கருத்துகள்