Intresting Information of Vadivalu re-entry | Tamil

     நடிகர் வடிவேலின் re-Entry எந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்பதை  மீறி, வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் இது  ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது உண்மைதான். வடிவேலு மீண்டும் நடிக்கும் எதிர்பார்க்கிறார்கள் அனைவருமே வடிவேலுவை திரையில் மட்டுமே பார்த்தவர்கள்.


      வடிவேலு அவரை உண்மையில் நம் எல்லாரையும் சிரிக்க வைத்த ஒரு அலாதியான அற்புதமான ஒரு கலைஞன் என்ற சந்தேகமே கிடையாது. ஆனால் இதில் என்ன மாறுபாடு என்றால் வடிவேலு ரீ-என்ட்ரி என்பது திரைஉலகம் ரசிக்கவும் இல்லை வரவேற்கவும்‌ இல்லை. காரணம் என்னவென்றால் வடிவேலுவின் இன்னொரு முகம் என்பது அப்படியே திரையில் காட்டப்படும் முகத்திற்கு எதிர்மாறானது. திரையில் மட்டும் தான் வடிவேலு ஒரு காமெடியன் (Comedian) ஆனால் நிஜ உலகில் வடிவேலு என்பவர் ஒரு வில்லன் (villain) என்பதை காரணத்துடன் விளக்குகிறேன். 


   தன்னை வாழ வைத்த திரையுலகத்தை சேர்ந்த இயக்குனர்கள் ( Directors)  மற்றும் நடிகர்களையும் (Actors) சிறு கலைஞர்களையும் வாட்டி வதைத்தவர் வடிவேலு. இவர் கடந்த ஆண்டுகளில் திமுகவிற்கு அரசியல் பிரச்சாரம் செய்தல் அதனால் தான் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது என்று கூறப்பட்டு வருகிறது இது உண்மையான காரணமா என்று பார்க்கலாம். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அவர்தான் பட வாய்ப்பை மறுக்க அழுத்தம் கொடுத்தார் என்று கூறப்பட்டாலும் உண்மையும் இல்லை‌ . ஏனென்று கேட்டாள் இவர் திமுகவிற்கு பிரச்சாரம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்களுக்கு பட வாய்ப்பு என்பதை மறுக்கப்பட்டு வந்தது.


   அவரின் ஆட்டிட்யூட் (Attitude) மிகவும் மோசமாக இருந்த காரணத்தால்  நிறைய தயாரிப்பாளர்கள் (Producer's) மற்றும் இயக்குனர்கள் (Directors) இவர்கள் இவரை தடுத்தனர் தவிர்த்தனர். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை கதாநாயகனின் (Hero) தயவு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது எதுவும் செய்ய முடியாது. வடிவேல் என்பவர் கதாநாயகர்களை பகைத்துக் கொண்டதனால்  நடிகர்கள் தங்கள் படங்களில் இவரைத் தவிர்த்து அதனால் நிறைய படங்களில் வாய்ப்பு கை விட்டு போனது. வடிவேல் வை வெறுத்த நடிகர்கள் சிலருடன் அவர்கள் முக்கியமாக விஜய் மற்றும் அஜீத் தங்களின் படங்களில் வடிவேலுவை மறுத்தனர்.


     விஷால்(Vishal) என்பவர்  தென்னிந்திய திரைப்பட உலகத் தலைவர் ஆனதும்  வடிவேலு அவருடன் நெருக்கம் பாராட்டி சில படங்களின் வாய்ப்பைப் பெற்றார் அதாவது கத்தி சண்டை விஷால் நடித்தது மற்றும் விஜய் நடித்த மெர்சல் ஆகிய படங்களில் காண வாய்ப்பு கிடைத்தது ஆனாலும் அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. இந்த படங்களில் மக்களின் ரசனை மாறியதால் இவரின் நகைச்சுவைகள் எடுபடாமல் போய்விட்டது. 


   வடிவேலுக்கு ஒரு ஜாக்பாட் என்னவென்றால் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். சுராஜ் என்பவர் மிகவும் நகைச்சுவை திறன்மிக்க ஒரு இயக்குனர் ஆவார். மிகவும் ஒரு திறமையான இயக்குனராகவும் இருக்கிறார் அதனால் இவரின் படம் வெற்றியடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.  வடிவேலுவின் re-entry இன் முதல்கட்டமாக நாய் சேகர் (Dog Segar) என்னும் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரிலேயே படம் அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


   லைக்கா நிறுவனத்திற்கு அவர் 5 படங்களில் நடிப்பார் என்று கூறியுள்ளார்‌.  நாய் சேகர் படம் மட்டுமல்லாமல் மேலும் ஐந்து படங்களுக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். என்ன தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பினால் மீம் கிரியேட்டர் (meme creator) களும் அவரது ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் (Social media) ஆதிக்கம் செலுத்தி வரும் வடிவேலு மீண்டும் வெள்ளித்திரையில் காண்போம் என்பதில் உறுதியாக கூறலாம். இவர் கூறியுள்ளதாவது " கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும், நகைச்சுவை கலைஞராகவும் " நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.  இவர் திரைத்துறையில் இன்னும் நன்றாக வளர வேண்டும் என்று நமது அமைப்பின் மூலமாக தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


வடிவேலு தரப்பிலிருந்து சுபாஷ்கரன் (லைகா MD) Meet பண்ணனும் என்று தூதுவிட்டு அவர்கள் சொன்னது என்னவென்றால் 3  Conditions  ஒப்பு கொண்டால் வாங்க சந்திக்கலாம் இல்லை எனில் வேண்டாம் என்று லைகா தரப்பில் கூறப்பட்டது.

Condition No 1 : இம்சை அரசன்2 படத்தின் வாங்கிய பணத்தை திரும்ப குடுக்கனும்


Condition No 2: அந்த படத்தை நடித்து முடித்து குடுக்கனும்.


Condition No 3: வேற இரண்டு படம் நடித்து குடுக்கனும்


இதை ஒப்பு கொண்ட பிறகுதான் வடிவேல் மீது இருந்த Red card நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்