Journey Of Mr.GK You Tube Channel | Tamil

    Mr.GK என்னும் YouTube Channel பற்றியும் அது கடந்து வந்த பாதையையும் கதையையும் இக்கட்டுரையில் காண்போம். தர்மதுறை என்னும் நபர் இதனை நடத்தி வருகிறார். ஆனால் இவரை மிஸ்டர் ஜிகே என்று அழைத்தால் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு தமிழ் மக்களின் மனதிலும் யூட்யூப் கம்யூனிட்டி ஒரு ஒப்பற்ற மற்றும் தவிர்க்க முடியாத ஒரு அங்கத்தை Mr.GK இருக்கின்றது.

     
      பல வருடங்களுக்கு முன்பு அனைவரிடமும் சாதாரண அழைப்பை மட்டும் பேசக்கூடிய மற்றும் செய்தியை தட்டச்சு செய்து அனுப்பும் முடிந்த செல்போன்கள் அனைவரின் கைகளிலும் சென்ற காலம்(Ex.Nokia 1100). அக்காலத்தில் சில தொலைபேசி அழைப்பு சேவை வழங்குபவர்கள்(Ex. Artel, Jio) ஒரு நாளுக்கு நூறு மின் செய்தியை அனுப்பலாம் என்றும் ஒரு திட்டம் இருந்தது. அதனை பயன்படுத்திய தர்மதுரை அவரிடமிருந்த தொலைபேசி எண்களுக்கு தினமொரு பொது அறிவு சார்ந்த குறுஞ்செய்தியை அனுப்பி வந்தார். பிறகு தன்னிடம் இருந்த அத்திட்டத்தின் மதிப்பு காலாவதி ஆகிவிட்டது அதனால் எந்த செய்தியும் அனுப்ப முடியாமல் இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு அச்செய்தியை பெற்று வந்த சில நண்பர்கள் மீண்டும் இவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார் என்னவாயிற்று இவ்வளவு நாள் அனுப்பிய குறுஞ்செய்தி ஏன் அனுப்பவில்லை என கேள்வி கேட்டிருந்தனர். ஒருவர் மட்டும் கேட்டிருந்த கேள்வியை மேலும் சில நண்பர்களும் கேட்டனர். அதில் ஒருவர் மிஸ்டர் ஜி கே என்று அழைத்ததால் சேனலுக்கு Mr.GK அப்பெயரை சூட்டினார்.

 
     பிறகு தொழில்நுட்ப வளர்ச்சியும் இன்டர்நெட் (Internet) வளர்ச்சியும் அதிகரிக்க காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப யூடியூபே க்கு மாறினார்.
இவருக்கு சிறுவயதில் நடந்த ஒரு கதையை பற்றி காண்போம். இவர் மூன்றாவது மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும்போது இவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது அதாவது இப்புவியில் எப்படி இரவுபகல் தோன்றுகிறது என்று இதனை அவர் தந்தையிடம் இவர் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்ததனால்.
இவர் தந்தை உடனே இவரை சமயலறைக்கு கூட்டி சென்று ஒரு லாந்தர் விளக்கை எடுத்து அது தான் சூரியன் எனவும் பக்கத்தில் இருந்த பொருட்களை எடுத்து சந்திரன் மற்றும் பூமி அதைப் பற்றிய செயல்முறை விளக்கத்தை செய்து காட்டி விளக்கினார். இதுதான் இவரது முதல் அறிவியல் பூர்வ வினாவாகும். 

 
      பிறகு ஒரு நாள் எப்படி கடிகாரத்தில் மணியை சரியாக பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார் அவர் தந்தை. படங்களில் Lift எவ்வாறு செயல்படுகிறது என்று இவரும் இவரது சகோதரரும் அவர்கள் தந்தையிடம் கேட்டு கொண்டிருந்த பொழுது அவர் தந்தை ஒரு lift இருக்கும் ஒரு சிறிய உணவகத்திற்கு கூட்டி சென்று அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கிக் கூறினார்.வறுமையில் தான் Mr.GK தந்தையும் தாயாரும் இவரை படிக்க வைத்தனர். நான்காம் வகுப்பு வரை ஆங்கில பாடத்திட்டத்தில் படிக்க வைத்தாலும் வறுமையின் காரணமாக மீண்டும் அரசுப் பள்ளியில் சேர நேர்ந்தது. 

    தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் இவர் சேர்ந்து அதனால் இவருக்கு சமூகம் சார்ந்த தகவல்களும் விஷயங்களும் நன்றாக புரிய நேர்ந்தது. இவரது தாயும் தந்தையும் இவரை வளர்த்து விதத்தில்தான் Mr.GK என்னும் Channel உருவாக முக்கிய காரணம் ஆகும். Book fair இல் சந்தித்து ஒருவர் அவரைக் கண்டு நமது Mr.GK சேனல் வீடியோக்கள் தரமாக இருப்பதனால் இது அதிக பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்களை கொண்டிருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார். இதற்கு காரணம் யூடியூப் என்பது Learning திடமாக இல்லாமல் ஒரு பொழுதுபோக்கு இடமாக இருப்பதனால் அதிக பார்வையாளர்களை பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்கள் மட்டுமே எடுக்கின்றனர்.

     இச்செயலானது தொடக்கத்தில் வரலாறு மற்றும் கணிதம் தொடர்பான வீடியோக்களில் இருந்து தற்பொழுதும் படிப்படியாக முன்னேறி அறிவியல் பொது அறிவியல் பொது விஞ்ஞானம் மற்றும் இயற்பியல் போன்ற துறைகளில் கால் எடுத்து வைக்கின்றது புதிதாக தொடங்கும் அணுக்கள் பற்றிய இயற்பியலை புரியும்படியும் சுலபமாகும் விளக்குவதில் வல்லவர் ஆகும் இதில் உள்ளது.இவர் ஒரு டாக்சி டிரைவரிடம் இப்படி செல்ல வேண்டுமென்று வழி கேட்டுள்ளார் உடனே அந்த டாக்சி டிரைவர் இவரை கண்டு நீங்கள் மிஸ்டர் ஜி கே தானே என்று கேட்டவுடன் சாதாரணமாக பேசத் தொடங்கியுள்ளனர் பிறகு அந்த டாக்சி டிரைவர் நான்காவது பரிமாணம் போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்களை பேசும்பொழுது இவர் தன்னை ஒரு பெருமையாக உணர்ந்து கொண்டார். 
      ஒரு சாமானிய மக்களுக்கு கூட சென்றடையும் வகையில் அறிவியலில் சுலபமாகவும் அருமையாகவும் கூறுவதில் வல்லவர் என்பதை இது நிரூபிக்கின்றது. இவர் திறமையான மற்றும் சிறிய YouTube , Subscriber குறைந்தவர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் எடுத்துக்காட்டாக சயின்டிஃபிக் தமிழன் போன்ற சேனல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் இவர் அறிவியல் சார்ந்த சேனல்களை பொறாமையுடன் காணாமல் அவற்றிற்கு உதவி செய்வதன் மூலம் மக்களுக்கு அறிவிப்பு கட்டுகிறார்.
இப்பொழுது அவரின் ஜீ தமிழ் என்னும் தொலைக்காட்சியில் மூடநம்பிக்கைக்கு எதிராக ஒரு சில நிகழ்ச்சிகளில் அறிவியல் நம்பும் குழுவிற்கு உறுதுணையாக நின்று மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறார். அதுமட்டுமன்றி ஜூனியர் ஜி கே இன்று இவரது மகளும் குறும்பு செய்து மக்களை சிரிக்கவும் மகிழ்விக்கவும் வைக்கின்றார். இவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு கட்டுரையைத் முடிப்போம்.

 
                    *****நன்றி*****

கருத்துரையிடுக

0 கருத்துகள்