Malignant Movie Review And Story In Tamil

இன்று நாம் Tamil Movies Da வழங்கும்‌ JAMS WAN இயக்கத்தில் அமெரிக்கன் Super Natural திகில் திரைப்படமாக வந்திருக்கும் Malignant திரைப்படத்தின் திரை விமர்சனத்தை காண்போம்.


கதை:

          இப்படத்தின் கதை கதாநாயகிக்கு யாரோ ஒரு மர்ம நபர் அடுத்தடுத்து பல கொலைகளை செய்வதாகவும் ஆனால் அந்த கொலைகள் எல்லாம் தனக்கு கண்கள் முன் காட்சிகளாக தெரிவதாக பல நேரங்களில் உணர்கின்றார்.இதை ஒரு தருணத்தில் Police காவல் துறையில் சொல்ல போக அது எப்படி உங்களுக்கு மட்டும் இந்த காட்சிகள் சரியாக தெரிகின்றது என்று Police தனது சந்தேக பார்வையை இவர்கள் மீது திரும்ப இதற்கு பின் என்ன நிகழ்ந்து இது தான் கதையின் தொடர்ச்சி.


நேர்மறை விமர்சனங்கள்  ( Positives):

  1. Annabelle Wallis இன் நடிப்பு திறமை முதிர்ந்த மற்றும் தன் திறைமையை காட்ட நிறைய இடங்கள் இப்படத்தில் இருந்தது அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

  2. இந்த படத்தின் அதிரடி காட்சிகளை நாம் சொல்லியவாறு மண் குறிப்பாக Climax முன் வரும் Action காட்சிகள் உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும் ஒரு இயற்கைக்கு புறம்பான திகில் படத்தில் அதிரடிகாட்சிகளா என்று ஆனால் படத்தில் உள்ளவற்றை தான் பதிவிடுகின்றேன. அந்த Action Sequences என்பது choreography செய்யமுடியாத ஒரு காட்சி அதை திறமையாக கையாண்டுஇருக்கிறார்கள்.இப்படத்தின்cinematographer களின் பங்கு அதிகமாக உள்ளது முக்கியமாக Michael Burghs இவரின் ஒளிப்பதிவு இப்படத்தில் இன்றி அமையாது. இங்கு Jams wann உடைய ஒளிப்பதிவை உன்னிப்பாக நோக்க வேண்டும் ஏனெனில் ஒரு திகில் படத்தில் நமக்கு ஒரு பதட்டத்தை ஏற்ப்படுத்தி Camera வின் Angle சரியான கோணத்தில் வைத்து படமாக்க வேண்டும். திகில் சப்தத்தை மட்டும் ஏற்படுத்தினால் போதாது அந்த ஒளிப்பதிவு என்பது முக்கிய பங்கு வகிக்கும்.


  1. இத்திரைப்படமானது ஒரு வீட்டுக்குள் நடக்கும் அந்த வீடு கதைக்களம் ஆதலால் அந்த வீடு ஒரு முழுமைக்கும் போலிதான் என்பது பார்த்தாலே தெரிகின்றது. மேலிருந்து ஒரு கதாபாத்திரம் மாடியில் இருந்து இறங்கி  கதவை திறந்து வருவதில் இருந்து மாடி படி எல்லாம் ஏரி வந்து அறை க்குள் செல்லும் வரை ஒரு Top Angle Shot அதாவது கழுகு பார்வையில் ஒரு படப்பிடிப்பு இருக்கும் அருமையான யோசனை.

  1. இப்படத்தின் VFX ஆனது அபாரமானது எடுத்துகாட்டாக கதாநாயகி தனது வீட்டில் தான் உள்ளார் இருந்தாலும் அந்த யாரோ ஒரு மர்ம நபர் எங்கையோ செய்யும் மர்ம கொலை இவர்களுக்கு கண்முன்னே தெரிவதற்கு காரணம் இவர்கள் அந்த கொலையாளி வீட்டிற்கே சென்றுவிடுவார்கள்  சிரிது நேரத்தில் கதாநாயகி வீட்டில் தான் இருப்பார் ஆனால் கொலை நடக்கும் நேரத்தில் அந்த கொலையாளி வீட்டிற்கு தன்வீடு அப்படியே மாறும் இதை VFX அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர்.


எதிர்மறை விமர்சனம் (Negatives) :

  1. எதிர்மறையாக இப்படத்தின் கதைதான் Conjuring போன்ற‌ படத்தை குடுத்த Jams Wan என்றாலே திகில் மற்றும் அமானுஷ்ய காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.ஆனால் இப்படத்தின் கதையை எழுதும் போதே அவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது Super natural horror thriller படமாக அல்லது Slasher horror thriller அல்லது psychological horror thriller அல்லது Serial killer படமாக கொடுக்கலாமா என்று குழப்பம் படத்தை பார்க்கும்போதே தெரிகின்றது.(இதை பார்க்கும் போது "கரகாட்டகாரன் படத்தில் கவுன்ட் மணி கூறுவார் இது பெட்ரோல்ல ஓடியது டீசல்ல ஓடியது இப்ப அது எதுல ஓடுதுனு எனக்கும் தெரியுது அதுக்கும் தெரியாத அது போல"

  1. கதாப்பாத்திரத்திர வடிவமைப்பு அவர் சில கதாபாத்திரங்களை Twisted ஆக எழுதி இருந்தாலும் ஒருசில இடங்களில் ஒட்ட வில்லை குறிப்பாக கதாநாயகியின் கதாபாத்திர வடிவமைப்பில்.

                     *****நன்றி*****

இறுதி:

      Jams wann படம் என்று எதிர்பார்ப்புடன் Supernatural horror thriller என்ற என்னத்தில் படத்தை  பார்த்தால் உங்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சும்.ஆனால் பொது பார்வையில் பார்த்தால் ஒரு முறை பார்க்கலாம். 18 வயது மேற்ப்பட்ட A Certified Movie ஆதனால் குழந்தைகள் பார்க்க கூடாது.கருத்துரையிடுக

0 கருத்துகள்