Madan Gowri life story

     MADAN GOWRI தமிழ்நாட்டில் இருக்கும் தனிநபர் யூடியூப் சேனலில் அதிக ரசிகர்களையும் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான SUBSCRIBER (5M subscribers) யையும் கொண்டுள்ள ஒரு சேனல். இச் சேனலில் தொடங்குவதற்கு உந்துதலாக இருந்தது ஒரு காதல் தோல்வி என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.

      சேனலை நடத்துபவர் பெயர்தான் மதன் கௌரி அவர் பெயரிலேயே அமைந்துள்ளது இந்த சேனல் மற்றும் இவர் வெற்றி பயணத்தை இக்கட்டுரையில் காண்போம். இவர் தனது கல்லூரிப் படிப்பை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் போய் MBA பயின்றுள்ளார் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு ஐடி நிறுவனத்தில் (It company) வேலை செய்துள்ளார். 


    இவருக்கும் ஒரு பெண்ணிற்கும் காதல் மலர்ந்துள்ளது ஆனால் அப்பெண் ஏதோ ஒரு காரணத்தினால் மதன் கௌரியை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். அப்பெண்ணுடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுத்தும் எந்த ஒரு வழியும் இல்லாததனால் சமூக வலைத்தளமாக இருந்த யூட்யூப்பில்(YouTube) மதன் கௌரி என்ற பெயரில் ஒரு சேனலை தொடங்கி தன் யார் என்பதையும் தன்னை தொடர்பு கொள்ளும்படியும் தன் காதலிக்காக ஒரு வீடியோவை வெளியிட்டார்‌ அதன் பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பி மேலும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். 

     அக்காலகட்டங்களில் இன்டர்நெட் வசதி (Internet) இந்தியாவில் இல்லாத காரணத்தினால் இவருக்கு பார்வையாளர்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. பிறகு ஜியோ (Jio) என்னும் நிறுவனம் தனது போர் ஜி (4G)  சேவையை இலவசமாக வழங்கியதுடன் அதிகமாக பார்வையாளர்கள் யூடியூப் என்னும் தளத்திற்கு இது யூடிப் இருக்கு மட்டுமல்லாமல் மதன் கௌரிக்கும் பார்வையாளர்களை வரவழைத்தது. 

    சமூக தேவைக்கான (Social awareness) வீடியோக்களையும் ,மர்ம பொருட்களுக்கான வீடியோக்களையும் (mystery), திகில் அனுபவத்திற்கான (Horror) வீடியோக்களையும், தீர்க்க முடியாத மர்மம்( Unsolved mystery)  போன்ற அனைத்து வகையான வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு அதனால் இவரின் சப்ஸ்கிரிபர் மதிப்பு 10 லட்சத்தை (1M subscribers) தாண்டியது. பிறகு இவர் தனது சொந்த தயாரிப்பில் "Monkeys with 5g" போன்ற பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். நாட்டில் நடக்கும் முக்கிய செய்திகளையும் தகவல்களையும் மக்களுக்குப் புரியும் பாணியில் எடுத்துரைத்து போடுவதனால் இவரின் சப்ஸ்கிரைப் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து 50 லட்சத்திற்கும்(5M subscriber);மேல் ஆனது. 
 
    
    மதன் கௌரியை சிலர் யூட்யூபில் இருக்கும் விக்கிபீடியா என்று கலாய்த்து விமர்சித்து உள்ளனர். கொரோனா பற்றிய செய்திகள் தினம் தினம் தவறாமல் சரியான முறையில் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு சரியான சொய்தியை சேர்த்தார். இவரின் சேனலின் Content காக News மொபைல் செயலிகளை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அதில் அதிக மற்றும் எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்கள் வந்ததனால் இவரின் மனதில் ஒரு யோசனை தோன்றியது.

      அது என்னவென்றால் தானே சொந்தமாக ஒரு User friendly தனிப்பட்ட விருப்பு செய்தி பகிர்மான செயலி ஒன்றை LMES  (Lets Make Education Simple) எனப்படும் யூட்யூப் சேனல் உடன் இணைந்து என்ற பெயருடன் வெளியிட்டுள்ளார். Kokru என்னும் செயலில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 500k ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களையும், ஆப்பிள் ஸ்டோர் எனப்படும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் அதிகப்படியான rating உள்ள ஒரு செய்தி செயலியாக உள்ளது. 

     தற்பொழுது இவர் நிறை    மக்களுக்கு ஏராளமா உதவிகளையும் மறைமுகமாக செய்து கொண்டு வந்து இருக்கின்றார். ஒரு காதல் தோல்வியினால் ஏற்பட்ட மன அழுத்தம் ஒரு புது வாழ்க்கை பயணத்தையே தொடங்கியுள்ளது ஒரு ஆச்சரியமான மற்றும் அதிசயமான நிகழ்வு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்