Don't Breath 2 Movie review

   அமெரிக்கன் Hollywood ல் வெளியான DON'T BREATH 2 என்ற Horror Thriller படத்தின் பட விமர்சனத்தை இங்கு பார்ப்போம். 

கதை (Story):
        Don't Breath 1 என்ற படத்தின் கண் தெரியாத நார்மொன் என்னும் 
கடின முதியவர் காதாபாத்திரம் வரும். அந்த முதல் பாகத்தின் எட்டுவருடம் கழித்து தொடர்ச்சிதான் இந்த இரண்டாம் பாகம் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த கண் தெரியாத நார்மென் Phoenix என்னும் மகளை வளர்கிறார். இந்த பெண்னை மிகவும் கன்டிப்பாக வீட்டினுள் உள்ளபடி வளர்கிறார். அவர் தந்தையிடம் கெஞ்சி கதறி எப்படியோ வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பும் போது அந்த பெண்ணை தூக்க ஒரு பெரிய குழு அந்த வீட்டிற்குள் செல்கின்றனர். இந்த பெண்னை வீட்டில் இருக்கும் அனைவரையும் கொன்றுவிட்டு உள்ளே சென்று தூங்கலாம் என்று நினைத்து செல்லும் இக்குழு என்ன ஆனார் இதுதான் இப்படத்தின் கதை.

நேர்மறை விமர்சனம் (Positives):
          முதலில் இப்படத்தின் கதையே ஒரு பாசிட்டிவ் தான். ஏனொன்றால் இதன் முதல் பாகம் சிறந்த Thriller படம் என்று ரசிகர்கள் இடையே வரவேற்ப்பை பெற்றது. காரணம் இரண்டு கண்களும் நன்றாக தெரிந்து சராசரியாக செயல்பட்டாலே திடிர்‌ என்று பத்து நபர்கள் துப்பாக்கி எடுத்து வரும்போது ஒரு பயம் வரும் ஆனால் கண்ணனே தெரியாமல் ஒரு நபர் என்படி அனைவரையும் கொன்றார் அந்த படத்தின் கதைகளம் தான் அதன் வெற்றிக்கு காரணம் அதே பொன்று கதைக்களம் தான் இது 10-15 நபர்களிடம் இருந்து தனது மகளை எப்படி காப்பாற்றினார் என்பது போல பரபரப்பான கதை தான் Thriller ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி வாய்ப்பு அதிகமாக உள்ளது .

   முக்கியமாக இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்‌ முக்கியமாக இரண்டு நபர்கள் Stephen Lang என்னும் நடிகர் இன் தெரியாத வராமலும் Madelyn Grace அவரின் மகளாகவும் இவர்களின் நடிப்பு இப்படத்தில் எப்படி இருக்கின்றது என்பதை பொருத்து தான் கதை நகரும் ஆகையால் இவர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. 

    இப்படத்தின் இசை மற்றும் சப்தம் , ஒளிப்பதிவு ஆகியவை பின்னனி இசை ஆகியவை வரை அருமை.

எதிர்மறை விமர்சனம் (Negatives)
      இப்படத்தின் மிக பெரிய ஒரு பிழை இதன் திரைக்கதை தான் பொதுவாகவே முதல் பகுதி வெற்றி என்றால் இரண்டாம் பாகம் எடுத்தே ஆகவேண்டும் என்பது Hollywood எழுதபடாத ஒரு விதி.இதை இவர்கள் Evil Dead காலம் தொட்டே செய்து வருகின்றனர். முதல் பாகத்தில் அந்த கண் தெரியாத நபர் ஒரு வீட்டிற்குள் போராட்டம் என்பது ஒரு பயம் கலந்த திரில் காட்சிகளாக இருக்கும் Horror thriller அதாவது குருதி தெரிக்க கூடிய திரில்லர் ஒரு பரபரப்பாக நாற்காலி முன் ரசிகர்களை அமரவைத்து பயத்தை ஏற்படுத்தும் அந்த பயம் கலந்த திரில் இருக்கும் ஆனால் அது அந்த படம் அதே எதிர்பார்ப்பில் இப்படத்திற்கு ரசிகர்கள் போனால் இப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை Action Thriller அதிரடி படமாக தான் திரைக்கதை செல்கின்றது .இது போன்று இரேப்பதால் என்றதும் இப்படம் இவர்கள் சொய்திருந்தாலும் நம் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிக்க கூடியதாக உள்ளது.

    ஒரு சில கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருந்தரிக்கலாம் ஆனால் படத்தின் வில்லன் Brandon கதாபாத்திரம் மற்றும் அவரின் மனைவியின் கதாபாத்திரம் மிக்சிறப்பாக இருந்தது.இவர்களுக்கு திரை காட்சி அதிகம் கொடுத்து இவர்களை வழுவாக உருவாக்கி இருந்தால் இந்த படம் இன்னும் அதிக உள்ளடக்கம் உள்ள படமாக இருந்திருக்கும்.
    மொத்தமாக இந்த படம் எப்படி இருக்கின்றது என்றால் எதிர்பார்பே இல்லாமல் ஒரு Hollywood பார்க்க ஆசையாக இருந்தால் பார்க்கலாம் ஆனால் Don't Breath 1 என்னும் ஒரு அட்டகாசமான படத்தின் நினைவில் வைத்து பார்த்ததில் உங்களுக்கு திரீப்தி அளிக்காது.இப்படம் திரையரங்குகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் வெளியாகி உள்ளது பார்க்க ஆசை உள்ளவர்கள் பார்க்கலாம்.

                   ******நன்றி******


கருத்துரையிடுக

0 கருத்துகள்