Annabelle Sethupathi Tamil Movie Review

   தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்சி நடிக்கும் Disney+Hotstar வெளியான Annabelle Sethupathi இப்படத்தின் பட விமர்சனத்தை (Review) பார்ப்போம்.
  கதை : ஒரு அழகான அரண்மனை அதில் நீண்டகாலமாக வெளியே போகாமல் உள்ளே கிடக்கும் ஒரு பத்து மேற்பட்ட ஆவிகள் அல்லது ஆன்மாக்கள் அடைப்பட்டு உள்ளது. இதில் ஒரே சமயல் காரரின்‌ ஆன்மாவும் அடைபட்டுள்ளது. இந்த பேய்களின் திட்டம் என்னவென்றால் யார் இந்த வீட்டிற்கு குடும்பம் குடும்ப மாக் வந்தாலும் அல்லது நான்கு ஐந்து நாள் தங்க வந்தாலும் சரி அவர்களை அந்த வீட்டில் ஒரு பெண் சமைக்க செல்லும் போது அந்த சமயல்காரரின் ஆன்மா அந்த குடும்ப தலைவியின் உடலில் புகுந்து தான் சமைக்கும் அந்த சமையலை குடும்ப உறுப்பினர்கள் உண்ணும் பொழுது எல்லாரும் இறந்துவிட்டனர் எனில் அந்த 10-12 ஆவிகளுடன் இணைந்து விடுவர். இந்த சாப்பாட்டை உண்டு பிறகு யாரேனும் ஒருவர் உயிருடன் இருந்தால் அவர் மூலமாக தான் அந்த ஆவிகளுக்கு சாப விமோட்சனம் கிடைக்கும். எனீறு உள்ளே இருக்கும் எல்லா ஆன்மாக்களும் நம்புகின்றது.அப்படி இருக்கும் அந்த அரண்மனைக்குள் நம்ம படத்தின் நாயகி இவர் ஒரு பகல் திருடி என்றே சொல்லலாம் அப்படி ஒரு நபர் குடும்பத்துடன் குறிப்பிட்ட காரணத்திற்கு இந்த அரண்மனை உள்ளே சென்ற பின் என்ன நடக்கின்றது என்பது தான் இந்த படத்தின் மொத்த கதையே. இந்த படம் பார்க்கும் போது இந்த கதைகளம் 2003 இல் அமெரிக்காவில் வெளியான ஒரு Horror comedy திரைப்படமான Haunted mansion என்ற படத்தின் கதைதான் என்று புரியும்.
நேர்மறை விமர்சனங்கள் (Positives):
     
       கிருஷ்ண கிஷோர் என்பவர்தான் இப்படத்தின் இசை அமைப்பாளர் அவரின் பங்களிப்பு அதிகம் இப்படத்தில் உள்ளது. படத்தில் இருக்கும் இரண்டு மூன்று பாட்டுக்கள் மிக அறுமையாக உள்ளது. குறிப்பாக இரண்டாவது பாடல் ஒரு பொப்பி நெம்பர் அதாவது இந்த கொரோனா காலகட்டத்தில் எவ்வளவு Stress ஆக Feel பன்னிக்கொன்டு இருக்கின்றோம் இந்த 2 வந்து பாட்டில் நடித்த அவ்வளவு நபர்களும் ஒரு Flow வில் மகிழ்ச்சியாக அவர் அவர் சொந்த நாட்டிய பாங்கை குதித்து ஆர்பாட்டம் செய்து நடித்திருப்பது தெரிகின்றது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமையாக பாடல் உள்ளது.இது போக படத்தின் பின்னணி இசை என்ன தேவையோ அது சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

 ‌ இந்த படத்தின் கதைக்களம் அதுவே சுவாரஸ்யமான கதைதான் ஏன்னென்றால் ஒரு நகைச்சுவை திகில் படத்திற்கு ஒரு பங்களாவில் நம்அடைப்பட்டு இருக்கும் இவ்வளவு ஆன்மாக்கள் ஒரு இளிச்சவாயன் வருவான் அவனை வைத்துதான் நாம் வெளியே போக வேண்டும் என்பதே நகைச்சுவை ஏற்படுத்தும். 

    இதில் நடித்த விஜய் சேதுபதி அவருக்கென்றே தனி நடிப்பு பானி அருமையாக நடித்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். டாப்சியின் கதாபாத்திரம் பொதுவாக Bollywood இல் கதாயாகிக்கு முக்கியத்துவம் உள்ள கடினமான சமூக அக்கறை உள்ள படங்களில் நடிக்கும் கதாயாகியான டாப்சியை இந்த படத்தில் பரம்பரிய உடை மற்றும் நவீன உடை அறிந்து ஆடும் பொழுது எல்லாம் இவ்வளவு stressfull ஆன இப்படதில் சந்தோசமாக நடித்து கொடுத்துள்ளார் முழு படத்திலும் உள்ளார்.  யோகி பாபுவின் கதாபாத்திரம் வழக்கமாக எப்படி இருக்குமோ அப்படி உள்ளது. ஒரு சில இடங்களில் மொக்க காமெடி ஒரு சில இடங்களில் சரியான காமெடி என்று சரியாக நடித்துள்ளார். நடிகை ராதிகா கதாபாத்திரம் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் யோகி பாபுவின் ஆவி ராதிகா அவர்கள் உடலில் புகுந்து பாபுவின் உடல் மொழியை அப்படியே 10-15 வினாடிகள் அருமையாக நடித்துள்ளார்.
எதிர்மறை விமர்சனம் (Negatives)
    
     இந்த படத்தின் திரைக்கதை தான் படத்தின் அடித்தளமே நகைச்சுவை திகில் தான் என்று விளம்பரபடுத்தப்பட்டுள்ளது. Trailers அப்படிதான் இருக்கின்றது வரும் பார்வையாளர்களை மத்தில் அப்படிதான் இருக்கின்றது.அனால் படத்தின் முதல் பகுதி முழுவதும் திகில் நகைச்சுவை எடுக்க முயற்சி செய்துள்ளனர் ஆனால் ஒருசில இடங்களை தவிர எங்கையும் நமக்கு சிரிப்பு என்பது வரவில்லை. இடைவேளைக்கு ஐந்து நிமிடங்களுக்குப் முன் நான் இந்த கதைக்களம் ஒரு திடிர் திருப்பம் என்று நினைத்தால் இரண்டாம் பகுதியில் ஒரு பின்கதையை திறந்து ஒரு Emotional Romantic Drama வாக் முழுமைக்கும் மாற்றிவிடுகின்றனர். அதனால் படத்தின் வகையே மாறிவிடுகின்றது இப்படம். மீன்டும் கடைசி 10 நிமிடத்தில் அதே Horror comedy க்கு வந்துவிடுகின்றனர் அதனால் நம்மால் இப்படத்துக்கு ஒன்று முடியவில்லை இரண்டும் கெட்டான் படமாகவே உள்ளது.

   மொத்தமாக இந்த படம் திகில் நகைச்சுவை படம் நன்றாக ரசிக்கலாம் என்று நினைத்து சென்றால் உங்களை திருப்தி செய்வது கடினம் ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பொழுது போக்கிற்கு வேண்டும் என்றால் தாராலமாக பார்க்கலாம். எந்த வயது வரம்பும் கிடையாது குழந்தைகளும் இப்படத்தை பார்க்கலாம்.


இந்த படத்தினை பிரபல யூடியூப் (YoutubeTamil Talkies நீலநிற சட்டை மாறன் என்பவன் கழுவி ஊற்றிய உள்ளார்.
                     *****நன்றி*****

TAMIL MOVIES DA RATING : 6/10


       கருத்துரையிடுக

0 கருத்துகள்