The Journey Of "A2D cahnel" YouTube Channel | Tamil

   A2D channel என்பது தமிழில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் டெக் (Computer Tech) யூடியூப் சேனல் ஆகும். இதனை நந்தா என்பவரும் அவரின் சகோதரரும் நடத்திவருகின்றனர். இவர்கள் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சேனலை தொடங்கி அதன் வாயிலாக கம்ப்யூட்டர் மற்றும் அதன் பாகங்களின் டெக்னாலஜி மற்றும் அதன் செயல் திறன் ஆகியவற்றை கணக்கிட்டு அதை வாங்குவதால் நமக்கு என்ன பயன் மிகுந்தது என்று ஒளிவு மறைவுமின்றி கூரும் சேனலாக உள்ளது.


    A2D channel நந்தா என்பவர் கம்ப்யூட்டர் சார்ந்த செய்திகளையும் தொழில்நுட்ப தகவல்களையும் ஒப்பிட்டு களையும் கூறுவார். இவரின் சகோதரர் கதை கந்தசாமி என்னும் தலைப்புடன் கதையம்சம் (Story Games) கொண்ட விளையாட்டுகளையும் சில வித்தியாசமான விளையாட்டுகளையும் விளையாடி அதனை கதை தோரணையுடன் வீடியோக்களை வெளியிடுவார். 

  
 A2D channel பற்றி இக்கட்டுரையில் காண்போம். இச் சானலில் ஒரு கணினியை எப்படி தனி முக்கிய செயல்படு பாகங்களை (CPU,RAM, GRAPHIC CARDS,SSD,HARD DISK,PSU) மட்டும் வாங்கி அவற்றை ஒன்றிணைத்து சரியான விலையில் மற்றும் நம் தேவைக்கு பொருத்தமாக கணினிகளை உருவாக்க தேவைப்படும் அறிவை (Knowledge) கற்று தருகிறார் மற்றும் உருவாக்கியும் தருகிறார்.

     இந்த சேனலில் ஒரு சொல் அதிகம் விரும்பப்படுகிறது அச்சொல்லின் பெயர் என்னவென்றால் "உருட்டு". இவர்கள் தங்களை விட அதிக ரசிகர்களை (Subscribers) கொண்ட சேனல்களில் உள்ள தவறுகள் மற்றும் தவறான வழிநடத்தல்களையும் நையாண்டி மற்றும் பாசாங்குடன் கூறி ரசிகர்களை நல்வழிப்படுத்தி மற்றும் சிரிக்கவும் வைக்கின்றனர். இவர்களின் ரோல்மாடலாக Tamil Gaming மற்றும் PewDiePie போன் ரேட் தனிநபர் நடத்தும் சேனல்கள் உள்ளன.

    இந்த சேனலின் உண்மையான ரசிகர்கள் A2D ஆர்மி மற்றும் PC soldiers என்று அழைக்கப்படுகின்றனர். மொபைலில் Game விளையாடி சலித்து ஒரு Computer Game விளையாட வேண்டும் என்ற ஆசையுடைய, Unity. போன்ற Game வடிவமைக்கும் மென்பொருளும் , Premier pro போன்ற கானெலி திருத்தும் மென்பொருளை உபயோகிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு Build your own pc என்னும் தலைப்புடன் ரசிகர்களுக்கு கணினி செய்து அதனை இலவசமாக பேக் செய்து courier மூலமாக அனுப்புவார்கள்.

விமர்சனங்களும் சர்ச்சைகளும்: 

Holoware என்றழைக்கப்படும் ஒரு பயன்பாட்டு கணினி செய்யும் நிறுவனத்திற்கும் A2D channel ஒரு பெரிய ஒரு சட்டம் மோதலே நடந்து உள்ளது எனலாம். Holoware என்ற நிறுவனம் தங்கள் தயாரிக்கும் கணினிகளின் விலை மற்றும் அவற்றின் செயல்திறனுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது என்பதனை தனது செயல்முறை விளக்கங்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் விளக்கி உள்ளது. இந்நிறுவனத்தினை தமிழில் அதிக சந்தாதாரர்களை உடைய Tamil Tech , Tech Boss போன்ற தங்களைத்தாங்களே Tech youtubers என்று சொல்லக்கூடிய சிலர் மற்றும் Irfan views என்னும் உணவு விமர்சனங்களையும் குறிப்புகளையும் சொல்லக்கூடிய கணினிகளை பற்றி தெரியாத ஒரு சேனல் இதனை வாங்க வற்புறுத்தி விளம்பரம் செய்தது மற்றும் மக்களை தவறான முறையில் வழி நடத்தி அதன் மூலம் ஆதாயம் தேட தொடர்ந்து காணொளிகளை வெளியிட்டு வந்தனர். 


    A2D channel விளைவுகள்: ஒரு படிக்காத மற்றும் படித்த சாமானிய மனிதன் கூட தனக்கென ஒரு கணினியை வடிவமைக்கும் வல்லமையும் அதனைப்பற்றி அறிவும் மேம்படுத்திய ஒரு பெருமை இந்த channel சாரும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்